கம்பராமாயணம் 9279 · யுத்த 28.41
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
ஆற்றார் இருந்துயர் பொறுக்கல் ஆற்றார் கண்களைச் சூல்கின்றாரும் - (இந்திரசித்து இறந்த) அந்தப் பெரிய துயரைப் பொறுக்க முடியாதவராய் கண்களைத் தோண்டுகின்றவர்களும்; கழுத்தினைத் தடிகின்றாரும் - தம் கழுத்தினை வெட்டுகின்றவர்களும்; புண்கொள மார்பின் திறந்து ஈருளைப் போக்குவாரும் - புண் கொள்ளுமாறு மார்பினைப் பிளந்து திறந்து, ஈரலை வெளிப்படுத்துவாரும்; பண்கள் புக்கு அலம்பும் நாவை - பண்கள் புகுந்து ஒலிக்கின்ற நாவை; உயிரொடு பறிக்கின்றாரும் - உயிரோடு பறிக்கின்றவர்களும் ஆகிய பெண்கள்; எண்களில் பெரிய ஆற்றார் - எண்ணில் அடங்காதவராயினர்.
சூல்கின்றார் - தோண்டுகின்றார் தடிதல் - வெட்டுதல் "வாளோச்சிமிகத் தடிந்தார்" (பு.வெ. 5,8) ஈருள் - ஈரல். அலம்புதல் - ஒலித்தல், இந்திரசித்தின் இறத்தல் துன்பத்தைத் தாள முடியாதவர்களின் செயல் கூறப்பட்டது. துன்பத்தின் மிகுதி காட்டுவான் பெண்கள் மேல் வைத்துக் கூறினார்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- Those gouging out their eyes, those cutting at their throats,
- those tearing open their breasts into wounds to pull out the liver,
- those wrenching out, living, the tongues in which melodies echoed:
- past all counting were those who could not bear that great grief.
What the poem says
The grief of the demon women at Intiracittu's death goes beyond weeping to self-destruction: they tear out their eyes, cut their throats, rip open their breasts and tear out their own tongues. The commentary notes that the poet shows the extremity of the sorrow through the women.