கம்பராமாயணம் 9280 · யுத்த 28.42

Section யுத்த காண்டம் / 28. இராவணன் சோகப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

மாதிரம் கடந்த திண்தோள் மைந்தன் தன் - திசைகளையெல்லாம் வென்ற திண்ணிய தோள்களையுடைய மகனுடைய, மகுடச் சென்னி போதலைப் புரிந்த யாக்கை - முடியணிந்த தலை நீங்கப் பெற்ற உடலை; பொறுத்தனன் புகுதக் கண்டார் - சுமந்தவனாய் இராவணன் இலங்கைக்குள் புகக் கண்டவர்கள்; ஓதநீர் வேலை அன்ன கண்களால் - வெள்ளமான நீரைக் கொண்ட கடலைப் போன்ற பரந்த கண்களால்; உகுத்த வெள்ளக் காதல் நீர் ஓடி - சொரிந்த, அன்பினை வெளிப்படுத்தும் வெள்ளநீர் ஓடிச்சென்று; ஆடல் கருங்கடல் மடுத்தது - அலையாடுதலை யுடைய கரிய கடலைக் கலந்தது.

அன்று, ஏ - அசைகள்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. The body of his son, whose strong shoulders conquered every quarter,
  2. from which the crowned head had been parted, those who saw him enter carrying it,
  3. from eyes like the sea of surging waters, shed a flood
  4. of tears of love that ran and merged into the dark sea of dancing waves.

What the poem says

Those who see Irāvaṇaṉ come in carrying the headless body of his world-conquering son weep so much that, from eyes as wide as the sea, their tears run down in a flood and pour into the ocean.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1mātiram kaṭanta tiṇ tōḷ maintaṉtaṉ makuṭac ceṉṉi
pōtalaip purinta yākkai poṟuttaṉaṉ pukutak kaṇṭār,
ōta nīr vēlai aṉṉa kaṇkaḷāl ukutta veḷḷak
kātal nīr ōṭi, āṭal karuṅ kaṭal maṭuttatu aṉṟē.