கம்பராமாயணம் 9281 · யுத்த 28.43

Section யுத்த காண்டம் / 28. இராவணன் சோகப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

ஆவியின் இனிய காதல் - இந்திரசித்தின் உயிரினும் இனிய காதலை உடைய; அரக்கியர் முதல்வர் ஆய - அரக்கியர் முதலோராகிய; தேவியர் குழாங்கள் சுற்றி - அவன் மனைவியர் கூட்டங்கள் சூழ்ந்துகொண்டு; சிரத்தின் மேல் தளிர்க்கை சேர்த்தி - தத்தம் சிரங்களின் மேல் தளிர்போன்ற கரங்களைச் சேர்த்துக் குவித்துக்கொண்டு; ஓவியம் வீழ்ந்து வீழ்ந்து புரள்வன ஒப்ப - சித்திரப் பதுமைகள் தரையில் வீழ்ந்து புரள்வன போலப் புரளா நிற்க; குருதிநீர்க் குமிழிக் கண்ணான் - இரத்தம் நீர்க்குமிழிகளைப் போலக் கொப்பளித்துக் கொண்டிருக்கும் கண்களை உடைய இராவணன்; ஒல்லைக்கோ இயல் கோயில் புக்கான் - விரைவாக அரசியற்குரிய அரண்மனையில் புகுந்தான்.

முன்பு இராவணன் கூறியவாறு (பாடல் 38) இந்திரசித்தின் மனைவியர் பலவகையினராதலின் "அரக்கியர் முதல்வராய தேவியர்” என்றார். இராவணன் கூறி அரற்றியவாறு போலவே, அவன் தன் மைந்தன் உடலோடு இலங்கைக்குள் புகுந்தவுடனே இந்திரசித்தின் தேவிமார் வந்து அரற்றி வீழ்ந்தனராக. அவர்தம் அழகிய தோற்றம் புலப்பட, 'ஓவியம் புரள்வன ஒப்ப' எனக் கூறினார்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. While the throngs of queens, led by demon women, whose love was sweeter
  2. than life to him, surrounded him, their tender hands joined on their heads,
  3. falling and falling again and rolling like painted figures, swiftly
  4. he entered the royal palace, his eyes bubbling with blood.

What the poem says

Intiracittu's many wives, demon women foremost among them, crowd round the body, hands raised over their heads in grief, falling and rolling on the ground like beautiful painted dolls. Irāvaṇaṉ, his eyes welling with tears of blood, hurries into the palace. What he dreaded a few verses earlier is now happening.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1āviyiṉ iṉiya kātal arakkiyar mutalvar āya
tēviyar kuḻāṅkaḷ cuṟṟi, cirattiṉmēl taḷirk kai cērtti,
ōviyam vīḻntu vīḻntu puraḷvaṉa oppa, ollaik
kō iyal kōyil pukkāṉ, kuruti nīrk kumiḻik kaṇṇāṉ.