கம்பராமாயணம் 9282 · யுத்த 28.44
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
மயன் மகள் - மயனுடைய மகளாகிய மண்டோதரி; பாரம் கருங்குழல் கற்றை கால் தொட - பாரமுள்ள கரிய கூந்தல் கற்றை (அவிழ்ந்து) கால்களைத் தொடா நிற்க; கமலப் பூவால் குரும்பையைப் புடைக்கின்றாள் போல் - தாமரைப் பூவினால் (தென்னங்) குரும்பையை அடிப்பவளைப் போல; கைகளால் முலைமேல் கொட்டி - கைகளால் முலைகள் மேல் அடித்துக் கொண்டு; 'அருங்கலச் சும்மை தாங்க - அரிய அணிகலன்களாகிய சுமையைத் தாங்குவதற்கு; அகல் அல்குல் அன்றி, சற்றே மருங்குலும் உண்டு உண்டு' என்ன, மறுகி வந்தாள் - அகன்ற அல்குல் மட்டும் அல்லாது, சிறிது இடையும் உண்டு' எனக் கண்டோர் வியந்து கூறுமாறு (ஒல்கி நடந்து) மனம் கலங்கி வந்துற்றாள்.
துன்பம் மிகுந்ததால் தலைவிரி கோலத்துடன் மண்டோதரி வந்தனள் என்பதாம். உத்தமப் பெண்ணாகையால் காலளவு நீண்ட கற்றைக் கூந்தலையுடையவள் என்றார்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- The heavy mass of her dark tresses touching her feet, as if beating
- young coconuts with lotus flowers, striking her breasts with her hands,
- so that people said, "To bear the load of precious jewels there is not only the broad hips,
- there is a little waist too, there is!" Mayaṉ's daughter came, distraught.
What the poem says
Maṇṭōtari, Irāvaṇaṉ's chief queen, daughter of the divine architect Mayaṉ and mother of Intiracittu, comes rushing in, her long hair loosened in mourning down to her feet. She beats her breasts with her lotus hands, like someone beating young coconuts with flowers. Even in grief her beauty is such that onlookers marvel that so slender a waist exists between the full hips and breasts.