கம்பராமாயணம் 9284 · யுத்த 28.46

Section யுத்த காண்டம் / 28. இராவணன் சோகப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1உயிர்த்திலள்; உணர்வும் இல்லள்; 'உயிர் இலள் கொல்லோ 'என்னப்
பெயர்த்திலள், யாக்கை; ஒன்றும் பேசலள்; பில்கி யாதும்
வியர்த்திலள்; நெடிது போது விம்மலள்; மெல்ல மெல்ல,
அயர்த்திலள் அரிதின் தேறி, வாய்திறந்து, அரற்றல் உற்றாள்.

பொருள் · Meaning in Tamil

உயிர்த்திலள், உணர்வும் இல்லள் - (அங்ஙனம் வீழ்ந்த மண்டோதரி) மூச்சடங்கி உணர்வற்றவளாய்; 'உயிர் இலள் கொல்லோ?' என்ன யாக்கை பெயர்த்திலள் - உயிர் நீங்கப் பெற்றாளோ என ஐயுறுமாறு உடம்பு அசையாதவளாய்; விம்மி யாதும் ஒன்றும் பேசலள் வியர்த்திலள் - விம்மலெடுத்து எதைப் பற்றியும் பேசாதவளாய், வியர்வரும்பாதவளாய், நெடிது போது அயர்த்தனள் - நீண்ட நேரம் அயர்ச்சியுற்றுக் கிடந்து; மெல்ல மெல்ல அரிதின் தேறி விம்மலள் - பின்பு மெல்ல மெல்ல அரிதில் தெளிந்து தேம்பி; வாய் திறந்து அரற்றலுற்றாள் - வாய் திறந்து அரற்றத் தொடங்கினாள்.

பெருந்துயர் உற்றவர்களின் மெய்ப்பாடுகள் கவிஞரால் நுட்பமாகப் புலப்படுத்தப் பெறுகின்றன. இலக்குவன் பிரமாத்திரத்தால் வீழ்ந்து கிடந்ததைக் கண்ட இராமனின் மெய்ப்பாடுகளாக (கம்ப. 8639) விவரிக்கப்படுபவை இங்கு ஒப்பு நோக்கத்தக்கதாம்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. She did not breathe; she had no awareness; so that one wondered, "Is she lifeless?"
  2. she did not stir her body; she spoke no word; sobbing, not at all
  3. did she sweat; for a long while she did not sob; slowly, slowly
  4. she lay senseless, then with difficulty came round, opened her mouth and began to wail.

What the poem says

The poet traces the stages of shock: Maṇṭōtari lies so still and breathless that she seems dead, makes no sound and no movement, until slowly she comes back to herself and begins to lament. The commentary compares Irāmaṉ's similar state when he saw Ilakkuvaṉ struck down by Piramaṉ's weapon.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1uyirttilaḷ; uṇarvum illaḷ; 'uyir ilaḷkollō 'eṉṉap
peyarttilaḷ, yākkai; oṉṟum pēcalaḷ; vimmi yātum
viyarttilaḷ; neṭitu pōtu vimmalaḷ; mella mella,
ayarttaṉaḷ aritiṉ tēṟi, vāy tiṟantu, araṟṟaluṟṟāḷ.