கம்பராமாயணம் 9286 · யுத்த 28.48

Section யுத்த காண்டம் / 28. இராவணன் சோகப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1'அய்யனே! அழகனே! என் அரும்பெறல் அமிழ்தே! ஆழிக்
கய்யனே, மழுவனே, என்று அவர் வலி கடந்த கால
மொய்யனே! முளரி அன்ன நின்முகம் கண்டிலாதேன்,
உய்வெனே? உலகம் மூன்றுக்கு ஒருவனே! செருவலோனே!

பொருள் · Meaning in Tamil

ஐயனே! அழகனே! என் அரும் பெறல் அமிழ்தே - என் ஐயனே! அழகிற் சிறந்தவனே! என் பெறுதற்கரிய அமிழ்தம் போன்றவனே; ஆழிக் கையனே, மழுவனே என்று - சக்கரப் படையை ஏந்திய கையை உடைய திருமாலும், மழுப்படையை உடைய சிவனும்; என்று இவர் வலி கடந்த கால மொய்யனே! - என்று சொல்லப்படுகின்ற (முதல் தேவர்களாகிய) இவர்களின் வலிமையை வெற்றி கொண்ட எமனைப் போன்ற வலிமையை உடையவனே! உலகம் மூன்றுக்கு ஒருவனே! செருவலோனே! - உலகம் மூன்றினுக்கும் ஒருவனாய்ச் சிறந்தவனே! போரில் வல்லவனே; முளரி அன்ன நின் முகம் கண்டிலாதேன் உய்வெனோ - தாமரை மலர் போன்ற நினது முகத்தைக் கண்டிலாத யான் உயிர் வாழ்ந்திருப்பேனோ? (வாழேன்).

ஆழி - சக்கரம், ஆழிக்கையன் - திருமால், மழுவன் - சிவன், செரு - போர்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. "My lord! My beautiful one! My nectar so hard to win! O you strong as Death,
  2. who overcame the might of those called the one with the discus in hand and the one with the axe!
  3. Not seeing your face like a lotus,
  4. shall I live? O peerless one of the three worlds! O mighty in battle!"

What the poem says

Maṇṭōtari addresses her dead son with tender and heroic titles. He was strong as Death itself and overcame even Tirumāl, who holds the discus, and Civaṉ, who holds the battle-axe. She cannot live without seeing his lotus face.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1'aiyaṉē! aḻakaṉē! eṉ arum peṟal amiḻtē! āḻik
kaiyaṉē, maḻuvaṉē, eṉṟu ivar vali kaṭanta kāla
moyyaṉē! muḷari aṉṉa niṉ mukam kaṇṭilātēṉ,
uyveṉō? ulakam mūṉṟukku oruvaṉē! ceru valōṉē!