கம்பராமாயணம் 9287 · யுத்த 28.49
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
தாள் அரிச் சதங்கை ஆர்ப்பத் - (நின்) காலில் பரலோடு கூடிய சதங்கை ஆரவாரிக்க; தவழ்கின்ற பருவம் தன்னில் - தவழ்ந்து விளையாடுகின்ற இளம் பருவத்தில்; கோள் அரி இரண்டு பற்றி - வலிமையுள்ள சிங்கங்கள் இரண்டினைப் பிடித்து; மாட முன்றினில் கொணர்ந்தனை - மாடத்தின் முற்றத்தில் கொணர்ந்தாய்; கொணர்ந்து கோபம் மூளுறப் பொருத்தி - அவ்வாறு கொணர்ந்து அவற்றிற்குக் கோபம் மூளுமாறு ஒன்றோடு ஒன்று போர் செய்யுமாறு விடுத்து; முறையின் ஓடி மீள அருவிளையாட்டு - முறையாக ஓடி மீளா நிற்க, அவ்விளையாட்டினை; விதியிலாதேன் இன்னம் காண்பெனோ - நல்லூழ் இல்லாத யான் இனி மேலும் காண்பேனோ?
அரி - சதங்கையின் உள்ளிடும் பரல். கோள் அரி - வலிமை பொருந்திய சிங்கம். "அரி பொலி கிண்கிணியார்ப் போவா வடி” (கலி - 81, 6) "சுடு பொன் வளைஇய ஈரமை சுற்றொடு பொடியழல் புறந்தந்த செய்வுறு கிண்கிணி” (கலி 85-1-2) "கிண்கிணி களைந்த கால்" (புறம் 77-1) முதலானவை காண்க. இந்திரசித்தின் இளம் பருவத்தில் விளையாடிய அஞ்சாமையோடு கூடிய விளையாட்டினை நினைத்து மண்டோதரியின் தாயுள்ளம் தவிக்கின்ற தவிப்பினை இப்பாடல் படம் பிடித்துக் காட்டும் நலன் காண்க.
ஆங்கிலம் · English translationAI
Translation
- "In the age when you crawled, with jingling anklets ringing,
- you caught two fierce lions and brought them in; having brought them, you set them
- to fight till their fury flared, in the palace courtyard, and ran about in turn,
- an unforgettable game: shall I ever see it again, luckless that I am!"
What the poem says
Maṇṭōtari remembers her son as a crawling baby, little bells ringing on his ankles, already so fearless that he caught two lions, dragged them into the palace courtyard and set them fighting while he scampered about. The commentary cites lines from Kalittokai and Puṟanāṉūṟu on children's anklets and the bells on their feet.