கம்பராமாயணம் 9288 · யுத்த 28.50
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
அம்புலி! அம்ம வா! என்று அழைத்தலும் - (இளம் பருவத்தில் சந்திரனைக் கண்டு நீ 'அம்புலி! அம்ம வா!' என்று அழைத்த அளவில்; அமர்வெண் திங்கள் இம்பர் வந்தானை - விளக்கமுடைய வெண்திங்கள் இந்த உலகிற்கு (நின்கட்டளையை மறுக்க அஞ்சி) வந்தவனை, 'அஞ்சல்' என இரு கரத்தின் ஏந்தி - அஞ்சாதே எனக் கூறியபடி இரு கைகளாலும் ஏந்திக் கொண்டு; வம்புறும் மறுவைப் பற்றி - புதுமையாக உள்ள (நீ நினைத்த) களங்கத்தைப் பற்றி; 'முயல்' என வாங்கும் வண்ணம் - 'முயல்' எனக் கருதி எடுக்கும் தன்மையைக்; காண ஏசற்றேன் - காணுதற்கு ஆசைப்பட்டேன்; எம்பெருங்களிறே எழுந்திராயோ - எம் பெரிய களிறு போன்றவனே (அந்த ஆடலை மீண்டும் செய்து காட்ட) எழுந்திருக்க மாட்டாயோ?
அம்புலி - சந்திரன் அம்ம - கேட்டற் பொருளைத் தழுவி வரும் இடைச்சொல். 'அம்ம கேட்பிக்கும்' (தொல், சொல் - 278) இம்பர் - இவ்வுலகம். வம்பு - புதுமை. ஏசற்றேன் - ஆசைப்பட்டேன்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- "When you called, 'Moon! Come here!', the bright white moon
- came down here, and you held him in your two hands saying 'Do not fear,'
- and seized the strange dark mark to pull it out as a hare;
- I long to see that, my great tusker! Will you not rise?"
What the poem says
Every Tamil mother sings to her child "Moon, come here!" (ampuli, amma vā). Maṇṭōtari recalls that when her son called, the moon really did come down, too afraid to refuse him. The child held it gently, telling it not to be afraid, and tried to pull out the dark mark that Tamils see as a hare in the moon. She begs her "great young elephant" to get up and play that game once more.