கம்பராமாயணம் 9289 · யுத்த 28.51
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
முயல் கறை பயிலாத திங்கள் முகத்தியர் - முயற் களங்கம் பொருந்தாத சந்திரனைப் போன்ற முகத்தினை உடையவரான; இயக்கியர் அரக்கிமார்கள் விஞ்சையர் ஏழை மாதர் - இயக்கியரும், அரக்கியரும், வித்யாதர மகளிருமான நின் மனைவியர்; முழுதும் நின்னை மயக்கிய முயக்கம் தன்னால் - நின்னை முழுதுமாகத் தம் காதலால் மயக்கிச் சேர்ந்த புணர்ச்சியாலாகிய மெலிவினால்; மலர் அணை அமளிமீதே அயர்த்தனை உறங்குவாயோ? - மலரணை பரப்பிய படுக்கை மீது சோர்ந்து உறங்குகின்றாயோ? அமர் பொருது அலசினாயோ - (அல்லது) போர் செய்து இளைத்தமையால் படுத்திருக்கின்றாயோ?
மயக்கிய முயக்கம் - முயக்கத்தாற் பிறந்த அவசத்தைக் குறித்தது. ஏழையர் - பெண்கள். "எருதேறி யேழையுடனே' (தேவா 1171-2) அலசுதல் - வருந்துதல்; இளைத்தல். "காதலால் உளதாகிய அயர்ச்சியும், பொருதமையால் உளதாகிய இளைப்பும் அன்றி அசைவறக் கிடத்தற்குக் காரணம் வேறு இருக்க இயலாது என்று இந்திரசித்தின் இறப்பினால் பொங்கும் துன்பத்தை மாற்ற முயல்கிறாள் மண்டோதரி.
ஆங்கிலம் · English translationAI
Translation
- "The Iyakka women, the demon women, the Vicciyātara women, tender wives
- with faces like a moon that bears no hare-mark, by the embraces
- with which they bewitched you wholly, on a bed spread with flowers
- are you sleeping, exhausted? Or are you worn out from fighting in battle?"
What the poem says
Maṇṭōtari tries to deny the truth. Her son lies so still; surely he is only asleep, either worn out by the loving embraces of his many beautiful wives (Yakṣa, demon and Vidyādhara women with faces like a spotless moon), or tired from battle. These are the only reasons she can allow for him lying motionless.