கம்பராமாயணம் 9290 · யுத்த 28.52
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
முக்கணான் முதலினோரை - சிவபிரான் முதலிய முத்தேவர்களுடன்; உலகொரு மூன்றினோடும் - மூன்று உலகங்களோடும்; புக்கபோர் எல்லாம் வென்று நின்ற - உண்டான போர்கள் அனைத்தையும் வெற்றி கொண்டு நின்ற; என் புதல்வன் மக்களில் ஒருவன் கொல்ல மாள்பவன் போலாம் - என் மகன் மானிடரில் ஒருவன் கொல்ல இறப்பவனோ? மானமேரு உக்கிட அணு ஒன்று ஓடி - (இந்நிகழ்ச்சி) பெருமையை உடைய மேரு மலை சிதறும்படி ஓர் அணு ஓடிச்சென்று; உதைத்தது போலும் அம்மா! - 'உதைத்தது' என்று சொல்லுவது போல உள்ளது! என்னே வியப்பு!
போலாம் - உரையசை அம்மா - வியப்பிடைச் சொல்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- "The Three-eyed One and those first with him, together with the three worlds,
- my son who stood victorious in every battle he entered,
- is he one to die, killed by a single mortal? It is as if
- a single atom ran up and kicked great Mēru to pieces, alas!"
What the poem says
Maṇṭōtari cannot believe that her son, who beat Civaṉ and the other great gods and conquered the three worlds, could be killed by one mere human. It is as absurd as an atom kicking Mount Mēru, the cosmic mountain, to bits.