கம்பராமாயணம் 9292 · யுத்த 28.54

Section யுத்த காண்டம் / 28. இராவணன் சோகப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

என்று அழைத்து இரங்கி ஏங்க - என்று, மண்டோதரி அழைத்து ஏங்கா நிற்க, அரக்கர் கோமான் - (அதைக் கேட்டிருந்த) அரக்கர் வேந்தனாகிய இராவணன்; நமர்கட்கு எல்லாம் இத்துயர் - நம்மவர்க்கு எல்லாம் இந்தத் துயரம்; 'பொன் தழைத்தனைய அல்குல் - பொன் தழைத்தாற்போன்ற அல்குலை உடைய; சீதையால் புகுந்தது என்ன - சீதையினால் வந்தது என்று சினந்து; 'வன்தழைக் கல்லின் நெஞ்சின் வஞ்சகத்தாளை - வன்மை தழைத்த கல் போன்ற நெஞ்சினை உடைய வஞ்சகத்தாளை (சீதையை); வாளால் கொன்று இழைத்திடுவேன்' என்னா ஓடினான் - வாளால் கொன்று பகைவர்க்குத் தீங்கு புரிவேன் என்று (சீதை இருக்குமிடம் நோக்கி) ஓடினான்.

தான் பிறன்மனை நோக்கிய பிழை நினையாமல், தன்மேல் அன்பு செலுத்தாமல் தன் கணவனையே நினைந்து நிற்கும் சீதையைக் 'கல் நெஞ்சங் கொண்ட 'வஞ்சகி' எனக்கடிய நினைக்கும் இராவணச் செயல் மிகவும் அடாத செயலாம். இத் தன் குற்றம் நோக்காத தன்மையே அவன் குலத்தோடு அழிதற்குக் காரணமாயிற்று.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. As she cried out like this, grieving and moaning, saying, "This sorrow for all our people
  2. has come through Cītai, whose hips are like gold in bloom,"
  3. "That deceitful one with a heart of hard, thick-grown stone, with my sword
  4. I will kill her and finish her," said the lord of the demons, and ran.

What the poem says

Hearing Maṇṭōtari's words, Irāvaṇaṉ turns his fury on Cītai. All this suffering has come because of her, he thinks, and he rushes off sword in hand to kill her, calling her a stone-hearted deceiver. The commentary condemns this: Cītai's only "fault" is staying faithful to her husband, while Irāvaṇaṉ never admits his own crime in coveting another man's wife. That refusal to see his own wrong is what destroys him and his whole race.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1eṉṟu aḻaittu iraṅki ēṅka, 'it tuyar namarkaṭku ellām
poṉ taḻaittaṉaiya alkul cītaiyāl pukuntatu 'eṉṉa
'vaṉ taḻaik kalliṉ neñciṉ vañcakattāḷai, vāḷāl
koṉṟu iḻaittiṭuveṉ 'eṉṉā, ōṭiṉaṉ, arakkar kōmāṉ.