கம்பராமாயணம் 9293 · யுத்த 28.55

Section யுத்த காண்டம் / 28. இராவணன் சோகப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

ஓடுகின்றானை நோக்கி - (அவ்வாறு சீதை இருக்கும் இடம் நோக்கி) ஓடுகின்ற இராவணனைப் பார்த்து; உயர் பெரும் பழியை உச்சிச் - உயர்ந்த பெரிய பழியைத் தலையில், சூடுகின்றான் என்று அஞ்சி - சூடிக் கொள்கின்றான் என்று அஞ்சி; மகோதரன் துணிந்த நெஞ்சன் மாடு சென்று - மகோதரன் துணிந்த நெஞ்சனாய் அவன் பக்கத்தில் சென்று; அடியின் வீழ்ந்து வணங்கி - அவன் பாதங்களில் வீழ்ந்து வணங்கி, மன்னா! நின்புகழ்க்கு கேடு வந்து அடுத்தது என்னா - 'மன்னா! நின் புகழுக்கு கேடு வந்துவிட்டது என்று முன் சொல்லி; இனையன கிளத்தலுற்றான் - இத்தன்மையான சொற்களைப் பின்சொல்லலானான்.

உச்சிச் சூடுதலாவது - எல்லோரும் காணுமாறு தலையில் சூடிக் கொள்ளும் மாலை போலப் பழியை ஏற்றலாம். கற்புடைப் பெண்டிரைக் கொல்லுதல் பழிகளுள் தலையாயதாதலின் 'உயர்பெரும் பழி' எனப்பட்டது. தன் மன்னனுக்கு வரும் பழிக்குப் பெரிதும் அஞ்சும் அமைச்சனாதலின் அவன் கோபத்துக்கு அஞ்சானாய் துணிந்த நெஞ்சனாய்த் தன் மன்னனைத் தடுக்கத் துணிகின்றான் என்பதாகும். வான்மீகத்தில் இங்கு இராவணனைத் தடுத்து நிறுத்துபவனாகக் கூறப்படுபவன் 'சுபாரசுவன்' என்பவனாம்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. Seeing him running, fearing, "He is about to set on his head
  2. a towering, great disgrace," Makōtaraṉ, bold of heart,
  3. went up to him, fell at his feet, bowed, and saying, "O king, to your fame
  4. ruin has come near," began to speak these words.

What the poem says

The minister Makōtaraṉ sees that Irāvaṇaṉ is about to commit the worst of crimes, killing a chaste woman, a disgrace he would wear on his head for all to see. Braver about his king's honour than about his anger, he throws himself at his feet to stop him. In Vālmīki's Rāmāyaṇa it is a different counsellor, Supārśva, who restrains Rāvaṇa here.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1ōṭukiṉṟāṉai nōkki 'uyar perum paḻiyai uccic
cūṭukiṉṟāṉ 'eṉṟu añci, makōtaraṉ, tuṇinta neñcaṉ,
māṭu ceṉṟu, aṭiyiṉ vīḻntu, vaṇaṅki, 'niṉ pukaḻkku maṉṉā
kēṭu vantu aṭuttatu 'eṉṉā, iṉaiyaṉa kiḷattaluṟṟāṉ.