கம்பராமாயணம் 9294 · யுத்த 28.56
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
போர் உளதனையும் வென்று புகழ் உளதனையும் உள்ளாய் - போர்கள் அனைத்தையும் வென்று புகழ் அனைத்தையும் பெற்றுள்ளாய்; நீர் உளதனையும் சூழ்ந்த நெருப்பு உளதனையும் - நீர் உள்ளவரையும் பரவிச் சூழும் இயல்பைப் பெற்ற நெருப்பு உள்ளவரையும்; நீண்ட பார் உளதனையும், வானப் பரப்புளதனையும் - நீட்சியை உடைய பூமி உள்ளவரையும், ஆகாயப்பரப்பு உள்ளவரையும்; காலின் பேர் உளதனையும் பேராப் பெரும்பழி பிடித்திபோலாம் - காற்றின் பெயர் உலகில் வழங்கும் வரையிலும், நீங்காத பெரும் பழியைப் பெறுகின்றாய் போலும்.
தனை - அளவு குறிக்கப் பிற சொல்லின் பின் வரும் ஒரு சொல். "இத்தனையும் வேண்டும் எமக்கேலோர் எம்பாவாய்” (திருவாச - 7, 3) போலும் - உரையசை
ஆங்கிலம் · English translationAI
Translation
- "As long as water lasts, as long as encircling fire lasts, as long as
- the wide earth lasts, as long as the expanse of sky lasts, as long as the name
- of the wind lasts, you would take on an immovable great disgrace, it seems,
- you who have won every war there is and own all the fame there is."
What the poem says
Makōtaraṉ warns that killing Cītai would stain Irāvaṇaṉ's name for as long as the five elements (water, fire, earth, sky and wind) endure. He has won every battle and every kind of glory; this one act would undo it all for ever.