கம்பராமாயணம் 9295 · யுத்த 28.57
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
தெள்ளரும் காலகேயர் சிரத்தொடும் - (இவர் வலிமை எவ்வளவு என்று) தெளிதற்கு அரிய பெருவலி பெற்ற காலகேயர் தலைகளோடு; திசைக்கை யானை வெள்ளிய மருப்புச் சிந்த - திசை யானைகளின் வெள்ளிய கொம்பு சிதற; வீசிய விசயத்து ஒள்வாள் - வீசிய நின் வெற்றியை உடைய ஒள்ளிய வாள்; வள்ளி அம் மருங்குல், செவ்வாய் - கொடி போன்ற இடையினையும் சிவந்த வாயினையும் உடைய, மாதர்மேல் வைத்த போது - பெண் பாலர்மேல் செலுத்தியபோது; நாணத்தால் தானே குறைவது அல்லால் - வெட்கத்தால் அந்த வாள் தன் தொழிலில் குறைவு படுவதல்லாமல்; கொள்ளுமே ஆவி? - அவர் உயிரைக் கொள்ளுமோ? (கொள்ளாது)
காலகேயர் - காசிபருக்குக் கலை என்பவளிடம் பிறந்த அசுரர். இவர்கள் பொன்னிறமுடையவர்; வலிமை மிக்கவர். இந்திரனை வென்றவர்கள். கடலில் இருந்த இவர்களை இராவணன் வருணனை வெல்லச் செல்லுங்காலத்து வென்றான் என்பது உத்தர காண்டத்தில் உள்ளது. (உத்தர. திக்விசயப் 83) திக்கயங்களை இராவணன் வென்றமையையும் உத்தர காண்டத்தால் (திக்விசயப் 227) அறியலாம். வீரம் விளைத்த வாளைப் பேதைப் பெண் மேல் வீசுவது அவ்வாளுக்கே இழிவைச் சேர்க்கும் செயல் என்பதாம்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- "Your bright sword of victory, which you swung so that, along with the heads of the Kālakēyar,
- whose strength none can fathom, the white tusks of the elephants of the quarters were scattered,
- when it is laid upon a woman with a waist like a creeper and red lips,
- will it take her life? Will it not rather shrink from shame?"
What the poem says
Makōtaraṉ appeals to the honour of Irāvaṇaṉ's own sword. It cut off the heads of the mighty Kālakēya demons and snapped the tusks of the elephants of the directions, feats recounted in the Uttara Kāṇṭam. Turned against a defenceless woman, the sword would only shrink in shame. Using a hero's blade on a helpless woman disgraces the blade itself.