கம்பராமாயணம் 9296 · யுத்த 28.58
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
மங்கையை, குலத்துளாளை, தவத்தியை - ஒரு பெண்ணை, சிறந்த குலத்துள் தோன்றியவளை, தவ ஒழுக்கமுடையவளை; முனிந்து, வாளால் சங்கை ஒன்று இன்றிக் கொன்றால் - முனிந்து வாட்படையினால் ஐயமின்றிக் கொன்றால்; கங்கை அம் சென்னியானும் கண்ணனும் கமலத்தோனும் - கங்கை சூடிய தலையை உடைய சிவனும், திருமாலும், பிரமனும்; 'குலத்துக்கே தக்கான்' என்று - 'அரக்கர் குலத்துக்கே தகுந்தவன் இவன்' என்று; செங்கையும் கொட்டி உன்னை 'சிறியன்' என்னா சிரிப்பர் - சிவந்த கைகளைக் கொட்டி உன்னைச் "சிறியன்" என்று எள்ளிச் சிரிப்பர்.
பெண்ணைக் கொல்லுதல் பெரும்பாவம். அதுவும் நற்குலத்தில் தோன்றியவளைக் கொல்லுதல் அதனிலும் பாவம். அதனினும் கற்புக் கடம்பூண்டு நின்ற தவத்தியைக் கொல்லும் பாவம் பெரிது; எனவே தன் மன்னனை இப்பழியினின்று காக்க முயலும் மகோதரன் இராவண ஆணவத்தை அறிந்தவனாதலின், 'குலத்துக்கே தக்கான் என்றும் 'சிறியன்' என்றும் முத்தேவரும் நகைப்பர் எனக் கூறித் தடுக்கின்றான்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- "If, in anger, with your sword, without a second thought you kill a woman,
- one of noble birth, an ascetic, saying 'He is worthy of his race,'
- the one with the Gaṅgā on his fair head, and Kaṇṇaṉ, and the one on the lotus
- will clap their red hands and laugh at you, calling you 'petty'."
What the poem says
The sin grows with each step: to kill a woman is a great sin, to kill a woman of high birth is worse, and to kill one who keeps her chastity as a vow, like an ascetic, is worst of all. Knowing Irāvaṇaṉ's pride, Makōtaraṉ hits where it hurts: Civaṉ, Tirumāl (Kaṇṇaṉ) and Piramaṉ would clap and laugh, sneering that this is just what one would expect of a demon, and calling him small.