கம்பராமாயணம் 9297 · யுத்த 28.59
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
புலத்தியன் மரபில் வந்து புண்ணிய விரதம் பூண்டாய் - புலத்திய முனிவனுடைய மரபில் பிறந்து புண்ணிய விரதங்களை மேற்கொண்டவனே! நிலத்து இயல்பு அன்று; வானின் நெறி அன்று - பெண்ணைக் கொலை செய்தல் என்பது மண்ணுலக இயல்பன்று வானுலகத்தோர் நெறி அன்று; நீதி அன்று; தலத்து இயல்பு அன்று - நீதிக்குரியதும் அல்ல எவ்விடத்துக்கும் இயல்பல்ல; மேலோர் தருமமேல், அதுவும் அன்று - பெரியோர்கள் பின்பற்றிய தரும நெறியோ எனில் (இத்தருமத்தால் இதைச் செய்யலாம் என அனுமதிக்கப் பட்டதோ எனின் அதுவும் அன்று; வலத்து, இயல்பு அன்று - இது செய்தல்) வலிமையின் பாற்பட்டதுமன்று; மாயாப் பழிகொள மறுகுவாயோ? - (அப்பெண்ணைக் கொலை செய்து) என்றும் அழியாத பழியை ஏற்று (பின்பு எண்ணி) மனங்கலங்குவாயோ?
புலத்தியன் - பிரம தேவனின் மகன். அம்முனிவனின் மகன் விச்சிரவசு. அவன் மகன் இராவணன். மறுகுதல் - கலங்குதல். இராவணன் புண்ணிய விரதம் மேற்கொண்டதனை மாரீசன் கூற்றால் (கம்ப. 3245) அறியலாம்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- "It is not the way of the earth; it is not the path of heaven; it is not justice;
- it is not the way of any place; if it is the dharma of the great, it is not that either;
- you who were born in the line of Pulattiyaṉ and took holy vows!
- It is not the way of strength; will you take on an undying disgrace and live to regret it?"
What the poem says
Makōtaraṉ reminds Irāvaṇaṉ of his lineage. He is the grandson of the sage Pulattiyaṉ, son of Piramaṉ, through his father Viccaravacu, and has himself practised great austerities. Killing a woman is permitted by no law of earth or heaven and shows no valour; he would only earn eternal shame and torment himself afterwards.