கம்பராமாயணம் 930 · பால 14.44
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
சாந்து உயர் தடங்கள் தோறும் - சந்தன மரங்கள் ஓங்கியுள்ள மலைச் சாரல்கள் தோறுமுள்ள; தாது ராகத்தின் சார்ந்த - காவிக் கற்களின் செந்நிறத்தோடு பொருந்திய; கூந்தல் அம் பிடிகள் எல்லாம் - புறமயிருள்ள பெண்யானைகள் எல்லாம்; குங்குமம் அணிந்தபோலும் - குங்குமக் குழம்பு அப்பியவற்றை ஒத்துள்ளன; காந்து இன மணியின் சோதி - ஒளி விடுகின்ற பதுமராகக் கற்களின் செந்நிற ஒளியானது; கதிரொடும் கலந்து பூச - சூரியன் கதிர்களோடு சேர்ந்து செந்நிறத்தைப் பூச; வான் அகம் எப்போதும் - வானமானது எப்பொழுதும் செந்நிறமடைந்து; செக்கரை ஒக்கும் - செவ்வானத்தைப் போலும்.
செவ்வானம் மாலைக் காலத்தில்தான் தோன்றும். ஆனால், மலையிலுள்ள பதுமராக மணியொளி சூரியக் கதிர்களோடு மேலிடமெங்கும் பரவியிருப்பதால் பகலிலும் அச் செவ்வானம் தோன்றுவதாயிற்று என்பதாம். தாதுராகம்: காவிக்கல்லின் செந்நிறம். காவிக் கற்களில் சார்வதால் கரிய யானைகள் குங்குமக் குழம்பு பூசப் பெற்றார்போலத் தோன்றும் என்பது. பிறிதின் குணம் பெறலணியும், உவமையணியும் சேர்ந்து வந்துள்ளன.
ஆங்கிலம் · English translationAI
Translation
- On every slope where sandal trees grow tall, rubbing against the red of the ochre rocks,
- all the lovely shaggy cow elephants look as if they wore saffron paste;
- and as the light of the clusters of blazing rubies blends with the sun's rays and spreads,
- the sky, turned red, always looks like the glow of sunset.
What the poem says
The dark cow elephants rub against the red ochre rocks of the mountain and come away looking as if they were painted with saffron.
The rubies in the rock throw up a red glow that mixes with the sunlight. A red sky normally appears only at dusk, but here the sky looks like a sunset all day long. Things taking on the colour of what is near them is the figure at work here.