கம்பராமாயணம் 931 · பால 14.45
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
நிலமகட்கு அணிகள் என்ன - பூமிதேவிக்கு (இவை) அணிகள் என்னும்படி; நிரை கதிர் முத்தம் - வரிசையான கதிர்களையுடைய முத்துக்களை; சிந்தி மலைமகள் கொழுநன் - சிதறி உமாதேவியின் கணவனான சிவனது, சென்னி வந்து வீழ் - முடியில் வந்து விழுகின்ற; கங்கை மான - கங்கையைப் போல (வெண்ணிறத்தோடு), அலகு இல் பொன் - அளவில்லாத பொன்னை; அலம்பி ஓடி - கொழித்துக் கொண்டு பெருகி; சார்ந்துவீழ் அருவி மாலை - முத்துக்களோடு பொருந்தி ஓடிவரும் மலையருவியின் வரிசை; உலகு அளந்தவன் தன் - இந்த உலகத்தை அளந்தருளின திருமாலின்; மார்பின் உத்தரீயத்தை - மார்பில் அணிந்த மேலாடையை, ஒத்த - ஒத்து விளங்கிற்று.
சந்திர சயில மலை உலகளந்த திருமாலை ஒத்துள்ளது. அதில் பொன்னை அலம்பியோடி முத்தோடு பொருந்திய அருவிமாலை அத்திருமால் மார்பில் அணிந்த உத்தரீயத்தை ஒக்கும் என்றார் - தற்குறிப்பேற்ற உவமையணி. மலையருவிகள் பூமிதேவிக்கு அணியாகுமாறு முத்துக்களைச் சிந்தும் என்பது. அருவி வெண்ணிறத்தோடு வீழ்வதால் உத்தரீயத்திற்கு ஒப்பாயிற்று.
ஆங்கிலம் · English translationAI
Translation
- Scattering rows of shining pearls as if they were jewels for the Earth goddess,
- like the Gaṅgai that comes down on the head of the husband of the mountain's daughter,
- washing along boundless gold as they run, the garland of falling waterfalls
- was like the upper cloth on the chest of the one who measured the worlds.
What the poem says
The white waterfalls of the Moon Mountain come down like the Ganges falling onto the matted hair of Civaṉ, husband of Umā, the daughter of the mountain. They scatter pearls as ornaments for the Earth goddess and wash gold along with them.
The great mountain itself is like Viṣṇu, who measured the worlds in three strides. The bright streams running down its front are like the white upper cloth draped across his chest.