கம்பராமாயணம் 932 · பால 14.46

Section பால காண்டம் / 14. வரைக்காட்சிப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1கோடு உலாம் நாகம் போதோடு இலவங்கம் மலர் உம் கூட்டிச்
சூடு வார், களி வண்டு ஓச்சித் தூ நறும் தேறல் கொள்வார்,
கேடு இல மகரம் யாழின் கின்னரமிதுனம் பாடும்
பாடலால் ஊடல் நீங்கும் பரிமுகமாக்கள் கண்டார்.

பொருள் · Meaning in Tamil

கோடு உலாம் - கொம்புகளில் பூத்த; நாகப் போதோடு - சுரபுன்னை மலர்களோடு; இலவங்க மலரும் கூட்டி - இலவங்க மலரையும் சேர்த்து; சூடுவார் - அணிகின்றவரான அம் மலைவாணர்கள்; களி வண்டு ஓச்சி - மதுக் களிப்புள்ள வண்டுகளை ஓட்டிவிட்டு; தூநறுந்தேறல் உண்பார் - தூய மணம் பொருந்திய மதுவைக் குடிப்பவரானார்கள்; கேடு இலா மகர யாழின் - (அதனோடு) குற்றம் இல்லாத மகர வீணையோடு கூடி; கின்னர மிதுனம் பாடும் - இரட்டையர்களான கின்னரமென்னும் தேவசாதியர் பாடுகின்ற; பாடலால் ஊடல் நீங்கும் - இனிய பாடலால் (தாம்) கொண்ட ஊடல் நீங்குகின்றன; பரிமுக மாக்கள் கண்டார் - குதிரை முகங்கொண்ட தெய்வ மக்களையும் (அவர்கள்) கண்டார்கள்.

பூவைப் பறித்துச் சூடுதலும் மதுவைப் பருகுதலும், இனிய பாடலைக் கேட்டலும் தேவசாதியினர் செயல்களைக் கண்டு மகிழ்வதுமாக அங்கே சென்ற மக்கள் இருந்தார்கள் என்பது. கின்னர மிதுனம்: ஆண் பெண்களாகக் கூடி வாழ்பவரும் இசை வல்லாருமான தேவசாதியர். பரிமுக மாக்கள்: குதிரை முகமும் மனித உடலும் கொண்ட தேவசாதியர்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. Some put on nākam blossoms from the boughs together with clove flowers;
  2. some, chasing off the drunken bees, drank pure fragrant wine;
  3. and they saw the horse-faced beings, whose lovers' quarrels melt away
  4. at the songs the Kinnara pairs sing to the flawless makara lute.

What the poem says

The visitors from the camp enjoy the mountain. They wear wreaths of nākam and clove blossoms and drink fragrant wine, brushing away the bees that want it too.

They also see the semi-divine creatures of the place. The Kinnaras live in male and female pairs and are expert musicians. Their songs on the lute, decorated with a makara sea-monster, are so sweet that they end the lovers' quarrels of the horse-faced beings.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1kōṭu ulām nākap pōtōṭu ilavaṅka malarum kūṭṭic
cūṭuvār, kaḷi vaṇṭu ōccit tūnaṟun tēṟal uṇpār,
kēṭu ilā makara yāḻil kiṉṉara mituṉam pāṭum
pāṭalāl ūṭal nīṅkum parimuka mākkaḷ kaṇṭār.