கம்பராமாயணம் 933 · பால 14.47

Section பால காண்டம் / 14. வரைக்காட்சிப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1பெருங் களிப்பு உற்ற மைந்தர் பேர் எழில் ஆகத்தோடும்
பொரும் துணைக் கொங்கை அன்ன பொருவு இல் கோங்கு அரும்பின் மாடே,
மருங்கு எனக் குழையும் கொம்பின் மடப் பெடை வண்டும், தங்கள்
கருங்குழல் களிக்கும் வண்டும், கடிமணம் புணரக் கண்டார்.

பொருள் · Meaning in Tamil

பெருங்களிறு ஏயும் - பெரிய ஆண் யானையை ஒத்த; மைந்தர் பேரெழில் ஆகத்தோடு - இளைஞர்களின் மிக்க அழகுடைய மார்பிலே; பொரும் துணைக் கொங்கை - தாக்கும் இரட்டையான தனங்களை; அன்ன பொரு இல் - ஒத்த வேறு உவமை இல்லாத; கோங்கு அரும்பின் மாடு - கோங்கு அரும்புகளினிடத்து; மருங்கு எனக் குழையும் - (அம் மகளிரின்) இடையைப் போலத் துவளுகின்ற; கொம்பின் - பூங்கொம்பில் தங்கும்; மடப்பெடை வண்டும் - இளம் பெண் வண்டுகளும்; தங்கள் கருங்குழலில் - தம் கரிய கூந்தலில் படிந்து; களிக்கும் வண்டும் - களிக்கின்ற ஆண் வண்டுகளும், கடிமணம் புணர - புதுமணம் செய்து கொள்வதை; கண்டார் - (மக்கள்) கண்டார்கள்.

தம் தனம் போன்ற கோங்கு அரும்பிலே பூங்கொம்பில் வாழும் பெண் வண்டுகளும், கருங்கூந்தலில் படிந்த ஆண் வண்டுகளும் புதுமணம் புரிவதை அங்கே தங்கிய மகளிர் கண்டார் என்பது.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. Beside the matchless kōṅku buds, which are like the paired breasts that press
  2. against the beautiful chests of young men as strong as great bull elephants,
  3. the young female bees of boughs that sway like their waists, and the bees
  4. that revel in their own dark hair, they watched joining in a fragrant wedding.

What the poem says

The women of the camp watch the bees mating on the hillside. The female bees live on the kōṅku branches, slender and swaying like the women's own waists, among buds shaped like their breasts. The male bees have been drinking the scent of the flowers in the women's dark hair.

The two meet in a "wedding", and the scene mirrors the women's own love lives.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1peruṅ kaḷiṟu ēyum maintar pēr eḻil ākattōṭu
porum tuṇaik koṅkai aṉṉa poru il kōṅku arumpiṉ māṭē,
maruṅku eṉak kuḻaiyum kompiṉ maṭap peṭai vaṇṭum, taṅkaḷ
karuṅ kuḻal kaḷikkum vaṇṭum, kaṭimaṇam puṇarak kaṇṭār.