கம்பராமாயணம் 934 · பால 14.48

Section பால காண்டம் / 14. வரைக்காட்சிப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1படிகத்தின் தலம் என்று எண்ணிப், படர் சுனை முடுகிப் புக்க
சுடிகைப் பூம் கமலம் அன்ன சுடர் மதி முகத்தினார் தம்
வடகத்தோடு உடுத்த தூசும் மாசு இல் நீர் நனைப்ப, நோக்கி
கடகக் கை மறித்துத் தம்மில், கருங்கழல் வீரர் நக்கார்.

பொருள் · Meaning in Tamil

படர் சுனை - பரவியுள்ள நீர்ச் சுனையை; படிகத்தின் தலம் என்று - படிகக் கற்கள் கிடக்கும் இடமென்று; எண்ணி - மாறாகக் கருதி; முடுகிப் புக்க - விரைந்து சென்ற; சுடிகைப் பூங்கமலம் - சுட்டியணிந்த அழகிய தாமரையையும்; சுடர் மதி அன்ன - ஒளிவிடும் சந்திரனையும் ஒத்த; முகத்தினார்தம் வடகத்தோடு - முகத்தையுடைய மகளிரின் மேலாடையோடு; உடுத்த தூசை - (அரையில் கட்டிய) சேலையையும்; மாசு இல் நீர் நனைப்ப - கலங்காது தெளிந்த தண்ணீர் நனைக்க; நோக்கி - (அதை) கண்டு; கடகக் கை எறிந்து - கடகம் அணிந்த கைகளைக் கொட்டி; கருங் கழல் வீரர் - பெரிய கழலணிந்த வீரர்கள்; நக்கார் - சிரித்தார்கள்.

மகளிர் சுனையுள்ள இடத்தைப் பளிங்குத் தலமென்று கருதிச் சென்றதால், தமது ஆடை நனைந்தன. அதைப் பார்த்த வீரர்கள் கை கொட்டிச் சிரித்தனர் என்பது - மயக்கவணியும் பொதுவணியும் கலந்த கலவையணியாம்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. Thinking it a floor of crystal, they hurried into a spreading pool:
  2. women whose faces are like the bright moon and like a lotus wearing a forehead jewel;
  3. as the clear water soaked the upper cloths and the garments they wore,
  4. the warriors with great anklets watched, clapped their bangled hands and laughed among themselves.

What the poem says

The water of a mountain pool is so clear that some women take it for a floor of crystal and step briskly onto it. They end up soaked to the waist, upper cloths and all.

The watching warriors clap their hands and roar with laughter. The joke depends on the same kind of mistaken perception the poet used earlier for the bees and the mirrors.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1paṭikattiṉ talam eṉṟu eṇṇi, paṭar cuṉai muṭukip pukka
cuṭikaip pūṅ kamalam aṉṉa cuṭar mati mukattiṉārtam
vaṭakattōṭu uṭutta tūcu mācu il nīr naṉaippa, nōkki
kaṭakak kai eṟintut tammil, karuṅ kaḻal vīrar nakkār.