கம்பராமாயணம் 9300 · யுத்த 29.1

Section யுத்த காண்டம் / 29. படைக்காட்சிப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1அத்தொழில் அவரும் செய்தார்; ஆயிடை, அனைத்துத் திக்கும்
பொத்திய நிருதர் தானை கொணரிய போய தூதர்,
ஒத்தனர் அணுகி வந்து வணங்கினர், 'இலங்கை உன் ஊர்ப்
பத்தியின் அமைந்த தானைக்கு இடம் இலை; பணி என்? என்றார்.

பொருள் · Meaning in Tamil

அத்தொழில் அவரும் செய்தார் - (இந்திரசித்தின் உடலைத் தயிலத் தோணியில் இடும்) அத்தொழிலை அந்த ஏவலாளரும் செய்தனர்; ஆயிடை அனைத்துத்திக்கும் பொத்திய - அப்போது எல்லாத் திசைகளிலும் நிரம்பியுள்ள; நிருதர் தானை கொணரிய போய தூதர் - அரக்கர் சேனையைக் கொண்டு வரச் சென்ற தூதர்கள்; ஒத்தனர் அணுகி வந்து வணங்கினர் - ஒரு சேர நெருங்கி வந்து வணங்கினராய்; இலங்கை உன் ஊர்ப் பத்தியின் அடைந்த - (அரசே!) இலங்கையாகிய உனது ஊரில் வரிசையாக வந்து அமைந்த; தானைக்கு இடம் இலை; பணி என்?' என்றார் - சேனைக்கு இடம் இல்லை; இனி, யாம் செய்யத்தக்க பணி என்ன?' என்று வினவினார்கள்.

அத்தொழில் - இந்திரசித்துவின் உடலைத் தயிலத் தோணியில் இடும் தொழில். ஆயிடை - அவ் - இடை. அனைத்துத் திக்கும் - திக்கு அனைத்தும். பொத்திய - நிரம்பிய.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. They too did that task; meanwhile, the messengers who had gone
  2. to bring the armies of the Nirutar that crowded every quarter
  3. came up together and bowed, and said, "Ilaṅkai, your city,
  4. has no room for the army that has arrived rank on rank; what is your command?"

What the poem says

A new chapter begins, the Review of the Armies. With Intiracittu's body laid in oil, Irāvaṇaṉ's messengers return: they have summoned demon (Nirutar) armies from every part of the world, and so many have come that there is no room for them in Ilaṅkai. Irāvaṇaṉ will view these forces, his leaders will boast, the old counsellor Māliyavāṉ will advise giving Cītai back, and the commander Vaṉṉi will urge war.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1at toḻil avarum ceytār; āyiṭai, aṉaittut tikkum
pottiya nirutar tāṉaik koṇariya pōya tūtar,
ottaṉar aṇuki vantu vaṇaṅkiṉa, 'ilaṅkai uṉ ūrp
pattiyiṉ aṭainta tāṉaikku iṭam ilai; paṇi eṉ? eṉṟār.