கம்பராமாயணம் 9301 · யுத்த 29.2

Section யுத்த காண்டம் / 29. படைக்காட்சிப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1ஏம்பல் உற்று எழுந்த மன்னன் 'எவ்வழி எய்திற்று 'என்றான்;
கூம்பல் உற்று உயர்ந்த கையர், ஒருவழி கூறலாமோ?
வாம் புனல் பரவை ஏழும் இறுதியின் வளர்ந்தது என்னாத்
தாம் பொடித்து எழுந்த தானைக்கு உலகு இடம் தான் இல் என்றார்.

பொருள் · Meaning in Tamil

ஏம்பலுற்று எழுந்த மன்னன் 'எவ்வழி எய்திற்று?' என்றான் - மகிழ்ச்சியுற்று எழுந்த இராவணன் (அப்படை) எவ்விடத்து வந்துளது? என வினவினான்; கூம்பலுற்று உயர்ந்த கையர் - குவிந்து உயர்ந்த கையை உடையவர்களாகிய தூதுவர்கள்; 'ஒருவழி கூறலாமோ? வாம்புனல் பரவை ஏழும் - (அச்சேனை இன்ன இடத்தில் இருந்தது என்று சுட்டி) ஓரிடத்தைச் சொல்லுதல் கூடுமோ? அலைகள் தாவிச் செல்லுகின்ற கடல்கள் ஏழும், இறுதியின் வளர்ந்தது என்னா - ஊழி இறுதியில் பொங்கிப் பரந்தது என்னுமாறு; தாம் பொடித்து எழுந்த தானைக்கு உலகு இடம் இல்லை' என்றார் - தாமே கிளர்ந்து எழுந்த சேனை தங்குவதற்கு உலகம் இடமுடையதாக இல்லை என்று கூறினார்கள்.

ஏம்பல் - மகிழ்ச்சி. கூம்பல் உற்று உயர்ந்த கையர் என்றது சிரமேற் குவிந்த கரத்தவர் என்றவாறு. "கூம்பலங்கைத்தலத் தன்பரென் பூடுருகக்குனிக்கும்" (திருக்கோவை - 11) "குவிகையேவலர்' (குசேலர் - 2:78) எவ்வழி எய்திற்று? என்ற வினாவிற்கு "ஒரு வழி கூறலாமோ?" என்ற வினவிப் பதிலிறுத்தனர் தூதர். 'அரக்கர் தானைக்கு உலகில் இடமில்லை' என்றதனால் அது இறந்துபடும் என்ற குறிப்புப் பொருளும் தொக்கது.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. The king rose up delighted and asked, "By which way has it come?"
  2. With hands folded and raised high, they said, "Can one name a single way?
  3. As if the seven seas of leaping waters had swelled at the end of time,
  4. the army that has risen up of itself has no room in the world."

What the poem says

Irāvaṇaṉ, cheered at last, asks which way the army has come. The messengers, hands folded above their heads, answer with a question: how could anyone name one way? It has risen like the seven oceans flooding at the end of the world, and the earth has no room for it. The commentary sees a hidden hint that an army with no place in the world is about to leave it, that is, to die.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1ēmpaluṟṟu eḻunta maṉṉaṉ 'ev vaḻi eytiṟṟu 'eṉṟāṉ;
kūmpaluṟṟu uyarnta kaiyar, oru vaḻi kūṟalāmō?
vām puṉal paravai ēḻum iṟutiyiṉ vaḷarntatu eṉṉāt
tām poṭittu eḻunta tāṉaikku ulaku iṭam tāṉ illai eṉṟār.