கம்பராமாயணம் 9302 · யுத்த 29.3
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
மண் உற நடந்த தானை வளர்ந்த மாத்தூளி மண்ட - பூமியில் பொருந்த நடந்த சேனையால் பெருகிய துகள் மிகுந்து எழுந்து நெருங்குதலால்; விண்ணுற நடக்கின்றாரும் மிதித்தனர் ஏக - விண்ணிற் பொருந்த நடக்கின்ற தேவர்களும் (மண்ணில் நடப்பது போல) அத்துகளின் செறிவை மிதித்து நடக்க; கற்பத்தின் முடிவில் கார் போல் எண்ணுற அரிய சேனை - யுக முடிவில் எழும் மேகம் போன்று, கணக்கிட முடியாத அந்த அரக்கர் சேனை; கண்ணுற அருமை காணா - (தூளிப் பரப்பினால்) பார்த்தற்கு அருமையாகக் காணப்பட்டு; இலங்கை நோக்கி மேல் மேல் எய்தியது - இலங்கா புரியை நோக்கி மேலும் மேலும் சென்றடைந்தது.
தூளிமண்ட விண்ணுற நடக்கின்றாரும் (ஒப்பு) "கதிகொண்ட சேனை நடவெழுதுகள் ககனம் சுலாவி யனிலகதியுற முதிர் சண்ட சூர ரெணமிருளெழ முகில் பஞ்ச பூதவடிவு பெறவிய, னதிவண்டலாக வமரகுறை தருநகரம் பொன்வீதி புழுதியெழ' (வில்லி. பா. /6, 78)
ஆங்கிலம் · English translationAI
Translation
- As the vast dust raised by the army marching on the earth thickened,
- even those who walk in the sky trod upon it as they went; higher and higher,
- hard to make out with the eye, like the clouds at the end of an aeon,
- the army beyond counting came on toward Ilaṅkai.
What the poem says
The demon army marching toward Ilaṅkai kicks up so much dust that the sky-walking gods can tread on it like solid ground. Hard to see through its own dust cloud and impossible to count, it moves on like the storm clouds at the end of a cosmic age. The commentary cites a similar image from Villiputtūrār's Tamil Mahābhārata.