கம்பராமாயணம் 9303 · யுத்த 29.4

Section யுத்த காண்டம் / 29. படைக்காட்சிப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1வாள்தனில் வயங்க மின்னா; மழை அதின் இருள மாட்டா;
ஈட்டிய முரசின் ஆர்ப்பை, இடியது முழங்க மாட்டா;
மீட்டு இனி உரைப்பது என்னே? வேலைமீச் சென்றது என்னத்
தீட்டிய படையும், மாவும், யானையும், தேரும், செல்ல.

பொருள் · Meaning in Tamil

வாள்தனின் வயங்கமின்னா மழை அதின் இருள மாட்டா - அரக்க சேனை ஏந்திய வாட்களைப் போல மின்ன மாட்டாதனவான மேகங்கள் அப்படைஞரைப் போல (கடுமையால்) இருண்டிருக்கமாட்டா; ஈட்டிய முரசின் ஆர்ப்பை இடிப்பொடு முழக்கமாட்டா - (மேலும் அப்படை) நெருக்கமாக அடித்துச் செல்லுகின்ற முரசங்களின் ஆரவாரத்தை ஒப்ப அம் மேகங்கள் இடியொடு முழங்கமாட்டா; தீட்டிய படையும் மாவும் யானையும் தேரும் - இங்ஙனமாக ஒளி மிகுமாறு தீட்டப் பெற்ற ஆயுதங்களையும், குதிரைகள் யானைகள் மற்றும் தேர்களுமாக; வேலை மீச்சென்ற என்னின் - அச்சேனை (நிலத்தில் நடத்தற்கு இடமின்மையால்) கடலின் மீது எழுந்து நடந்து சென்றது என்றால்; செல்ல மீட்டு இனி உவமை இல்லை - (அங்ஙனம்) செல்லுகின்ற சேனைக்கு (மேகத்தைத் தவிற வேறு இனி உவமை கூற ஏதுமில்லை.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. Clouds cannot flash like their swords; they cannot darken like them;
  2. they cannot roar with their thunder like the massed drums;
  3. there is no other comparison left, except if the sea had risen and moved,
  4. for the honed weapons, horses, elephants and chariots as they went.

What the poem says

The poet tries comparisons and rejects them. Storm clouds flash less than the army's swords, are less dark than the demons, and thunder less loudly than their war drums. The only fitting image would be the ocean itself rising up and marching over the land.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1vāḷtaṉiṉ vayaṅka miṉṉā; maḻai atiṉ iruḷamāṭṭā;
īṭṭiya muraciṉ ārppai, iṭippoṭu muḻakkamāṭṭā;
mīṭṭu iṉi uvamai illai, vēlai mīc ceṉṟa eṉṉiṉ
tīṭṭiya paṭaiyum, māvum, yāṉaiyum, tērum, cella.