கம்பராமாயணம் 9306 · யுத்த 29.7

Section யுத்த காண்டம் / 29. படைக்காட்சிப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1'நெருக்கு உடை வாயிலூடு புகும் எனின், நெடிது காலம்
இருக்கும் அத்துணையே 'என்னா, மதிலினுக்கு உம்பர் எய்தி,
அரக்கனது இலங்கை உற்ற அண்டங்கள் அனைத்தின் உள்ள
கருக்கிளர் மேகம் எல்லாம் ஒருங்கு உடன் கலந்தது என்ன.

பொருள் · Meaning in Tamil

நெருக்குடை வாயிலூடு புகும் எனின் - நெருக்கத்தை உடைய வாயிலின் வழியாக உள்ளே நுழைவோம் என்றால்; நெடிது காலம் இருக்கும் அத்தனையே என்னா - 'நெடிதுகாலம் காத்துக் கொண்டிருக்கும் அவ்வளவே, (உள்ளே புகல் அரிது)' என்று கருதி மதிலினுக்கு உம்பர் எய்தி - மதிலுக்கு மேல் ஏறிச் சென்று; அண்டங்கள் அனைத்தின் உள்ள - எல்லா அண்டங்களிலுமுள்ள; கருக்கிளர் மேகம் எல்லாம் - கருக்கொண்ட மேகங்கள் எல்லாம், ஒருங்குடன் கலந்தது என்ன அரக்கனது இலங்கை உற்ற - ஒருசேர உடன் கலந்தது என்னுமாறு வந்த சேனைகள் அரக்கனாகிய இராவணனுடைய இலங்கை நகரை அடைந்தன.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. "If we go in through the crowded gates, it will only mean
  2. waiting a long time," so thinking, they went up over the walls
  3. and reached the demon's Ilaṅkai, as though all the dark, swelling clouds
  4. in all the universes had come together at once.

What the poem says

The gates are too crowded, so the troops simply climb over Ilaṅkai's walls rather than wait. Pouring in from every side, they look like the rain-heavy clouds of every universe gathering in one place.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1'nerukkuṭai vāyilūṭu pukum eṉiṉ, neṭitu kālam
irukkum attaṉaiyē 'eṉṉā, matiliṉukku umpar eyti,
arakkaṉatu ilaṅkai uṟṟa aṇṭaṅkaḷ aṉaittiṉ uḷḷa
karuk kiḷar mēkam ellām oruṅku uṭaṉ kalantatu eṉṉa.