கம்பராமாயணம் 9307 · யுத்த 29.8
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
அதுபொழுது அரக்கர் கோனும் அணிகொள் கோபுரத்தின் எய்தி - அப்பொழுது அரக்கர் தலைவனாகிய இராவணனும் அழகு மிக்க கோபுரத்தின் மேலே ஏறி; பொதுவுற நோக்கலுற்றான் - அச்சேனையைப் பொதுவகையால் நோக்கத் தொடங்கினவன்; வேலை ஏழும் கதுமென ஒருங்கு நோக்கும் - ஏழு கடல்களையும் விரைவாக ஒருங்கு காண (ஆவல் கொண்ட); பேதையின் காதல் கொண்டான் - அறிவிலி போல ஆசை கொண்டவனாய்; ஒரு நெறி போகப் போக விதிமுறை காண்பென் என்னும் வேட்கையான் - தன் பார்வையை ஒரு நெறியே செல்லுமாறு செலுத்தி விதிமுறைப்படி தனித்தனியே காண்பேன் என்னும் விருப்பத்தை உடையவனானான்.
மிகப்பெரிய அச்சேனையை இராவணன் விரும்பியவாறு தனித்தனியே காணவியலாது என்பதனைக் கூறவந்த கவிஞர் "வேலை ஏழும் கதுமென ஒருங்கு நோக்கும் பேதையின் காதல் கொண்டான்” என உவமை கூறினார்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- At that time the king of the demons too went up the splendid gate-tower
- and began to survey them as a whole; wanting to see them in due order,
- his gaze moving along one line after another, he had
- the longing of a fool who wishes to take in all seven seas at a single glance.
What the poem says
Irāvaṇaṉ climbs a gate-tower to review his troops. He wants to inspect them properly, rank by rank, but the poet says this is as foolish as hoping to see all seven oceans in one glance. The army is simply too big to take in.