கம்பராமாயணம் 9308 · யுத்த 29.9

Section யுத்த காண்டம் / 29. படைக்காட்சிப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1மாதிரம் ஒன்றின் நின்று, மாறு ஒரு திசைமேல் மண்டி
ஓதநீர் செல்வது அன்ன 'தானையை உணர்வு கூடா,
வேத வேதாந்தம் கூறும், பொருளினை விரிக்கின்றார் போல்
தூதுவர் அணிகள் தோறும் வரன்முறை காட்டிச் சொன்னார்.

பொருள் · Meaning in Tamil

மாதிரம் ஒன்றின் நின்று மாறு ஒரு திசை மேல் - ஒரு திசையில் நின்று மற்றொரு திசைமேல்; ஓதநீர் மண்டிச் செல்வது அன்ன தானையை - கடல்நீர் விரைந்து செல்வது போன்று இலங்கை நோக்கிச் செல்லுகின்ற சேனையை; தூதுவர் உணர்வு கூட்டி - தூதுவர்கள் (கேட்கின்றவனாகிய) இராவணனுடைய அறிவு கூடும்படி; வேதவேதாந்தம் கூறும் பொருளினை விரிக்கின்றார் போல் - வேதங்களும் வேதாந்தங்களும் கூறும் பரம் பொருளின் இயல்பினை விரித்துக் கூறுவோர் போல; அணிகள் தோறும் வரன் முறை காட்டிச் சென்றார் - அணிகள் தோறும் உள்ளவர்களை வரன் முறையாக விளக்கிக் காட்டிச் சென்றார்கள்.

பரம் பொருள் வேத வேதாந்தங்களாலும் எட்ட முடியாதது. அங்ஙனமாய பொருளை ஒருவாறு தர்க்கரீதியாக விளக்கிச் செல்லுவாரும், அதனைக் கேட்பாரும் எங்ஙனம் அப்பொருளை முற்றிலும் உணராமல் இருக்கின்றார்களோ அங்ஙனமே விளக்க முடியாத பெரும் எண்ணிக்கையான படைகளைத்தாமே முழுவதும் உணராதவராய தூதுவர் ஒருவாறு விளக்கிக் கூறக் கேட்டான் இராவணன்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. Of the army, like the ocean's water surging from one quarter
  2. onto the opposite direction, the messengers, to bring it within his grasp,
  3. like those expounding the meaning that the Vedas and Vedānta speak of,
  4. went through every division, pointing them out in due order.

What the poem says

The messengers act as guides, explaining each division to Irāvaṇaṉ in turn. The poet compares them to teachers expounding the Supreme described in the Vedas and Upaniṣads: just as neither teacher nor pupil can ever fully grasp that reality, the messengers cannot fully describe this countless host, nor can Irāvaṇaṉ fully take it in. The metre changes here for the catalogue of armies that follows.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1mātiram oṉṟiṉniṉṟu, māṟu oru ticaimēl maṇṭi
ōta nīr celvatu aṉṉa 'tāṉaiyai uṇarvu kūṭṭi,
vēta vētāntam kūṟum, poruḷiṉai virikkiṉṟārpōl
tūtuvar aṇikaḷtōṟum varaṉmuṟai kāṭṭic ceṉṟār.