கம்பராமாயணம் 9309 · யுத்த 29.10
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
சாகத் தீவினின் உறைபவர் - இவர் சாகத் தீவில் வாழ்பவர்; தானவர் சமைத்த யாகத்தில் பிறந்து இயைந்தவர் - அரக்கர்கள் செய்த வேள்வியில் தோன்றி அமைந்தவர்; தேவரை எல்லாம் மோகத்தின் படமுடித்தவர் - தேவர்களை எல்லாம் மோகத்தில் விழுமாறு மாயை செய்து முடித்தவர்; மாயையின் முதல்வர் - மாயை செய்வதில் முதன்மை பெற்றவர்; மேகத்தைத் தொடும் மெய்யினர் - (வானில் இயங்கும்) மேகத்தைத் தொடும்படி உயர்ந்துள்ள உடம்பினை உடையவர்; 'இவர்' என விரித்தார் - இவர்கள் என ஓரணியைக் காட்டி விரித்துக் கூறினர் தூதர்கள்.
சாகம் - தேக்கு. அம்மரங்கள் மிகுந்திருந்தமையால் அத்தீவு சாகத்தீவு எனப்பட்டது என்பர். இதனைத் தேக்கத் தீவு எனவும் கூறுவர். இது ஏழுதீவுகளுள் ஒன்றெனவும் கூறுவர் ஏனையவை நாவலந்தீவு. இறலித்தீவு, இலவந்தீவு, கிரவுஞ்சத்தீவு, குசைத்தீவு, புட்கரத் தீவு என்பனவாம்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- "Dwellers in the island of Cākam, born and formed in the sacrifice
- that the Tāṉavas performed, who brought all the gods
- to ruin in delusion, masters of sorcery,
- with bodies that touch the clouds: these are they," they explained.
What the poem says
The catalogue of the armies begins. In Purāṇic geography the world has seven island-continents. The first troops come from Cākam (Śāka), the island of teak trees. These demons were born from a sacrifice of the Dānavas, are masters of illusion who once confounded the gods, and are tall enough to touch the clouds.