கம்பராமாயணம் 9310 · யுத்த 29.11
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
நெடு விறலோய்! இவர் குசையின் தீவினின் உறைபவர் - நீண்ட வெற்றியை உடையவனே! இவர்கள் குசைத்தீவில் வாழ்பவர்கள்; கூற்றுக்கும் விதிக்கும் வசையும் வன்மையும் வளர்ப்பவர் - யமனுக்கும் பிரமனுக்கும் பழியையும் வலிமையையும் வளர்க்கின்றவர்; வானநாட்டு உறைவார் இசையும் செல்வமும் இருக்கையும் இழந்தது, இங்கு இவரால் - வானுலகில் வாழ்கின்ற தேவர்கள் தம் புகழையும் செல்வத்தையும் இருப்பிடத்தையும் இழந்தது இங்குள்ள இவராலேயாம்; விசையம் தாம் என நிற்பவர் - வெற்றி என்றால் அதற்குப் பொருள் தாமே என்னுமாறு வெற்றியே பெற்று நிற்கும் இயல்பினர் ஆவார்.
குசை - தருப்பைப்புல். அது நிறைந்திருந்தமை பற்றி அத்தீவு குசைத்தீவு எனப் பெயர் பெற்றது. கூற்றுக்கு வசையும், விதிக்கு வன்மையும் என இயையும். கூற்று இவர் உயிரைக் கொள்ள வியலாமையால் வசை அங்ஙனம் இவர் உயிரைக் கொள்ளவியலாதவாறு படைத்தமையால் பிரமனுக்கு வலிமை என்பதாம். விசையம் - வெற்றி. சென்ற போர் தோறும் வெற்றியே பெற்று வருதலின் வெற்றியே இவர்கள் தாமோ எனப் பிறர் வியக்குமாறு வாழ்பவர் என்றவாறு, விசயம் என்ற சொல் எதுகை நோக்கி விசையம் எனவாயிற்று.
ஆங்கிலம் · English translationAI
Translation
- "Dwellers in the island of Kuśa, who heap disgrace on Death and
- show the power of Fate; that the dwellers of the heavenly land
- lost their fame and wealth and seats was here, through these;
- they stand as if they were victory itself: these, O you of lasting valour!"
What the poem says
Next come the demons of Kuśa island, named after its kuśa grass. Death is shamed because he cannot take their lives, and Piramaṉ's power is shown in having made them so. It was these warriors who robbed the gods of their fame, wealth and homes; they have won so many battles that they seem to be victory itself.