கம்பராமாயணம் 9311 · யுத்த 29.12

Section யுத்த காண்டம் / 29. படைக்காட்சிப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1'இலவத் தீவினில் உறைபவர், இவர்கள்; பண்டு இமையாப்
புலவர்க்கு இந்திரன் பொன் நகர் அழிதரப் பொருதார்;
நிலவைச் செஞ்சடை வைத்தவன் வரம்தர, நிமிர்ந்தார்;
உலவைக் காட்டு உறு தீ என வெகுளி பெற்று உடையார்.

பொருள் · Meaning in Tamil

இவர்கள் இலவத்தீவினில் உறைபவர் - இவர்கள், இலவத் தீவினில் வாழ்பவர்கள்; இமையாப் புலவர்க்கு இந்திரன் - இமையா நாட்டமுடைய தேவர்களுக்குத் தலைவனாகிய இந்திரனது; பொன்னகர் அழிதரப் பண்டு பொருதார் - பொன்மயமான அமராவதி நகரம் அழிவெய்துமாறு முன்பு போர் செய்தவர்கள்; நிலவைச் செஞ்சடை வைத்தவன் வரம் தர, நிமிர்ந்தார் - பிறைச் சந்திரனைச் சிவந்த சடையில் வைத்த சிவபிரான் வரம் தந்தமையால் மேன்மை பெற்றவர்கள்; உலவைக் காட்டுஉறு தீஎன வெகுளி பெற்றுடையார் - உலர்ந்த மரங்கள் நெருங்கிய காட்டில் பற்றிய தீப்போல் பெருங்கோபம் கொண்டவர்கள்.

இலவ மரங்கள் நிறைந்த தீவாகலின் 'இலவத்தீவு' எனப்பட்டது. இமையாப்புலவர் - கண்ணிமைத்தலில்லாத தேவர்கள். பொன்னகர் - பொன்னமராவதி. குற்றம் செய்து சாபம் பெற்ற சந்திரனையே முடிமிசை வைத்த அருளாளன் முக்கட் பெருமான் ஆகலின் தீமையே புரியினும் அவர்தம் தவத்திற்காக வரம் நல்கினான் என்பதாம். உலவை - உலவை மரம். காட்டுத்தீ விரைந்து பரவுந் தன்மையது. அதுவும் உலர்ந்த மரங்கள் நெருங்கிய காடெனில் பெருந்தீக்கதுமென பரவுமன்றோ? அத்தகைய கடுங்கோபத்தினர் இவர்கள் என்றவாறு.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. "These dwell in the island of Ilavam; long ago they fought the unblinking
  2. sages' lord Intiraṉ so that his golden city was ruined;
  3. they rose to greatness when he who set the moon on his red locks granted them boons;
  4. their wrath is like fire that has caught a forest of dry trees."

What the poem says

The third army comes from the island of silk-cotton trees (ilavam). They once fought Intiraṉ, king of the unblinking gods, and wrecked his golden city Amarāvati. Civaṉ, who wears the crescent moon in his red hair, granted them boons; being gracious enough to wear the moon even after it was cursed for a fault, he rewards their austerity though they do evil. Their anger spreads like fire through a dry forest.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1'ilavat tīviṉiṉ uṟaipavar, ivarkaḷ; paṇṭu imaiyāp
pulavarkku intiraṉ poṉṉakar aḻitarap porutār;
nilavaic ceñ caṭai vaittavaṉ varam tara, nimirntār;
ulavaik kāṭṭu uṟu tī eṉa vekuḷi peṟṟuṭaiyār.