கம்பராமாயணம் 9312 · யுத்த 29.13

Section யுத்த காண்டம் / 29. படைக்காட்சிப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

இவர் அன்றில் தீவினின் உறைபவர் - இவர்கள் அன்றில் தீவில் வாழ்பவர்கள்; அமரர்க்கு என்றைக்கும் இருந்து உறைவிடம் என்றிட - தேவர்கட்கு எக்காலத்தும் இருந்து வாழ்கின்ற இடம் இது என்று பிறர் கூறிய அளவில்; மேருக்குன்றைக் கொண்டு போய் பண்டைக் குரைகடல் இட - அம்மேருமலையினைப் பெயர்த்துக் கொண்டு போய்ப் பண்டைக்காலத்தில் ஒலிக்கின்ற கடலில் இட முயலாநிற்க; அறக்குலைந்தோர் சென்று - மிகவும் நிலை குலைந்தவர்களாகிய அத்தேவர்கள் சென்று; இத்தன்மையைத் தவிரும் என்று இரந்திடத் தீர்ந்தோர் - 'இந்தச் செயலைக் கைவிடுங்கள்' என்று இரந்து கேட்டுக்கொள்ள அச்செயலை விடுத்த வீரமுடையவர்கள்.

அன்றில் தீவு - அன்றில் பறவைகள் நிறைந்த தீவாகலின் இப்பெயர் பெற்றது. இதனைக் கிரௌஞ்சம் என்பர் வடமொழியாளர். அறக்குலைதல் - மிகவும் நிலை குலைதல்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. "These dwell in the island of the aṉṟil bird; when it was said that Mount Mēru
  2. was the gods' dwelling place for ever, they carried off that mountain
  3. to throw it into the roaring sea, and the gods, utterly shaken,
  4. went and begged, 'Give up this deed,' and only then did they stop."

What the poem says

The fourth army comes from the island of the aṉṟil bird, called Krauñca in Sanskrit. Hearing that Mount Mēru was the gods' eternal home, these demons once uprooted it to throw it into the sea, and stopped only when the terrified gods came and begged them.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1'aṉṟil tīviṉiṉ uṟaipavar, ivar; paṇṭai amararkku
eṉṟaikkum iruntu uṟaiviṭam eṉṟiṭa mēruk
kuṉṟaik koṇṭu pōy kurai kaṭal iṭa, aṟak kulaintōr
ceṉṟu, 'it taṉmaiyait tavirum 'eṉṟu irantiṭat tīrntōr.