கம்பராமாயணம் 9314 · யுத்த 29.15
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
இறைவ! இந்த வாள் எயிற்று அரக்கர் - அரசே! இந்த வாள் போன்ற கோரைப் பல்லினை உடைய அரக்கர்கள்; இக்கருங்கடற்கு அப்பால் மந்த மாருதம் ஊர்வது - இந்தக் கரிய கடலுக்கு அப்புறத்தே தென்றல் தவழ்கின்ற; கந்த மாதனம் என்பது ஓர் கிரி அதில் வாழ்வோர் - கந்த மாதனம் என்பதோர் மலை, அம்மலையில் வாழ்பவராவார்; அந்த காலத்து அவ்ஆல காலத்துடன் பிறந்தோர் எண்ணிறந்தவர் - (பாற்கடல் கடையப் பெற்ற) அந்தக் காலத்து ஆலகாலத்தோடு உடன் பிறந்தவர் என்று சொல்லத் தக்கவர் எண்ணிக்கை இல்லாதவர்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- "Kantamātaṉam is a mountain beyond this dark sea
- on which the gentle south wind moves; those who dwell on it
- were born at that time along with that Ālakālam poison;
- these demons with sword-like fangs are beyond counting, O lord!"
What the poem says
This host lives on Mount Kantamātaṉam (Gandhamādana), beyond the sea, where soft breezes blow. Their origin is chilling: they were born at the churning of the milk ocean, together with the deadly Ālakālam poison. Their numbers cannot be counted.