கம்பராமாயணம் 9316 · யுத்த 29.17

Section யுத்த காண்டம் / 29. படைக்காட்சிப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1முக்கரக் கையர், மூஇலை வேலினர்; முசுண்டி
சக்கரத்தினர், சாபத்தால் இந்நின்ற தலைவர்,
நக்கரக் கடல் நாலொடு மூன்றுக்கும் நாதர்;
புக்கரப் பெருந் தீவிடை உறைபவர் புகழோய்!

பொருள் · Meaning in Tamil

புகழோய்! முக்கரக் கையர் மூஇலை வேலினர் - புகழினோய் (இவர்கள் மூன்று கைகளை உடையவர்கள் (அவற்றில்) மூன்று இலைகளை உடைய வேலினை உடையவர்கள்; முசுண்டி சக்கரத்தினர்; சாபத்தர்; இந்திரன் தலைவர் - முசுண்டி என்னும் ஆயுதத்துடன் சக்கரத்தை உடையவர்கள், வில்லை ஏந்தியவர்கள், இந்திரனுக்கும் மேலான தகுதி உடையவர்கள்; நக்கரக் கடல் நால் ஒரு மூன்றுக்கும் நாதர் - முதலைகள் வாழுகின்ற ஏழு கடல்களுக்கும் இறைமை பூண்டவர்கள்; புக்கரப் பெருந்தீவிடை உறைபவர் - (இத்தகைய சிறப்பினரான இவர்கள்) புட்கரம் என்னும் பெரும் தீவிடை வாழ்பவராவர்.

கரக்கை - மீமிசைச்சொல். முசுண்டி - ஒருவகை ஆயுதம். சாபம் - வில். நக்கரம் - முதலை 'புட்கரம்' என்ற சொல் எதுகை நோக்கி 'புக்கரம்' என நின்றது.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. "With three hands, with three-bladed spears, with muculṭi
  2. and discus, with bows, above Intiraṉ himself,
  3. lords of the four-and-three seas where crocodiles live,
  4. they dwell on the great island of Pukkaram, O famous one!"

What the poem says

The army from Puṣkara island (here spelt Pukkaram for the rhyme) has three-handed warriors armed with tridents, the muculṭi club, discuses and bows. They outrank even Intiraṉ and rule all seven crocodile-filled seas.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1mukkarak kaiyar, mū ilai vēliṉar; mucuṇṭi
cakkarattiṉar, cāpattar intiraṉ talaivar,
nakkarak kaṭal nāl oru mūṉṟukkum nātar;
pukkarap perun tīviṭai uṟaipavar pukaḻōy!