கம்பராமாயணம் 9317 · யுத்த 29.18

Section யுத்த காண்டம் / 29. படைக்காட்சிப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

இவர்கள் இறலி அப்பெருந் தீவிடை உறைபவர் - இவர்கள் இறலி என்கின்ற அந்தப் பெரிய தீவில் வாழ்பவர்கள்; பண்டு பெருந்தாய் சொல தம் வலியால் மறலியை - முன்பு (தம்) பெருமையுடைய தாய் சொல்லத்தமது வலிமையினால் எமனை; புறநிலைப் பெருஞ்சக்கர மால்வரைப் பொருப்பின் - (எழுலகங்கட்கும்) புறத்தே நிலைத்துள்ள பெரிய சக்கரவாளம் என்கின்ற பெரிய மலையில்; விறல் கெடச் சிறையிட்டு அயன் இரந்திட விட்டோர் - அவனுடைய வலிமை கெட வென்று சிறைவைத்துப் பின்பு பிரமன் இரந்து வேண்டியதால் அவனை விடுத்தவர்கள்.

இறலி - இத்தி என்றும் மருதமரம் என்றும் கூறுவர். சக்கரவாளகிரி மணி. 6. 355 உரைக்குறிப்புக் காண்க.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. "Death himself, long ago, at their great mother's word, by their might,
  2. on the great Cakravāḷa range of mountains that stands outside all,
  3. they imprisoned, breaking his strength, and released him when Ayaṉ begged;
  4. these dwell on that great island of Iṟali."

What the poem says

The army from Iṟali island. At their mother's bidding these demons once overpowered Yama, god of death, and locked him up on the Cakravāḷa range, the ring of mountains around the edge of the world, freeing him only when Piramaṉ (Ayaṉ) pleaded for him.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1'maṟaliyai, paṇṭu tam perun tāy cola, valiyāl,
puṟa nilaip peruñ cakkara māl varaip poruppiṉ,
viṟal keṭac ciṟaiyiṭṭu, ayaṉ irantiṭa, viṭṭōr;
iṟali ap perun tīviṭai uṟaipavar ivarkaḷ.