கம்பராமாயணம் 9318 · யுத்த 29.19
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
நாதா! வேதாளக் கரத்து இவர் - தலைவனே! வேதாளத்தின் கையைப் போன்ற கையை உடைய இவர்கள்; நான்முகன் பண்டு உம் தமக்கு புவியிடம் விரிவு போதாது - நான்முகனாகிய பிரமன் முற்காலத்து, "உமக்கு இந்நிலவுலகத்தின் பரப்பு விரிவு போதாது ஆதலால், எழுவகையாய் நின்ற புவனம் பாதாளத்து உறைவீர் எனப் பணிப்ப - ஏழு வகையாக நின்ற புவனங்களில் பாதாளத்தில் தங்குவீர்களாக” எனக் கட்டளை இட; புக்கு இருந்து, உனக்கு அன்பினால் இவண் நடந்தார் - அங்கு சென்று வாழ்ந்திருந்து உன்பால் கொண்ட அன்பால் இங்கு வந்தவர்களாவர்.
வேதாளம் - பேய் எனினுமாம். "வேதாளம் சேருமே வெள்ளெருக்குப் பூக்குமே" (நல்வழி - 23)
ஆங்கிலம் · English translationAI
Translation
- "These with hands like vētāḷam ghouls, when long ago the Four-faced One commanded,
- 'The expanse of the earth is not enough for you; of the worlds that stand in seven tiers,
- dwell in Pātāḷam,' went in and lived there,
- and, O lord, for love of you they have marched here."
What the poem says
These demons, with hands like those of the vētāḷam ghouls, were too big for the surface of the earth, so Piramaṉ sent them to live in Pātāḷam, one of the seven underworlds. Out of loyalty to Irāvaṇaṉ they have come up from there to fight.