கம்பராமாயணம் 9319 · யுத்த 29.20
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
இருள் நிறத்தவர் நிருதி தன்குலப் புதல்வர் - இருள் போன்ற நிறத்தினை உடைய இவர் நிருதி என்னும் திசைக்காவலனது குலப் புதல்வர்கள்; நின் குலத்துக்கு நேர்வர் - (தகுதிகளில்) நின் குலத்துக்கு ஒப்பானவர்கள்; "தேவர்கட்குப் பருதி" எனத் தக்க பண்பினர் - 'தேவர்கட்குச் சூரியன்' என்னத் தக்க பண்புடையவர்கள்; பானக் குருதி பெற்றிலரேல் கடல் ஏழையும் குடிப்பர் - பருகுவதற்கு உரிய உதிரம் பெறாமற் போவாரே ஆயின் ஏழு கடல்களையும் பருகிவிடக் கூடியவர்; ஒருத்தர் ஏழ் மலையையும் எடுப்பர் - ஒருவரே ஏழு மலைகளையும் எடுக்கத் தக்க மிடுக்குடையவர்.
நிருதி - தென்மேற்குத் திசையின் காவலனாம். இவன் மனைவி தீர்க்காதேவியின் வயிற்றுப்பிறந்த மக்கள் இப்படையினராம். வீரம், தவம் முதலான தகுதிகளில் இராவணன் குலத்துக்கு ஒப்பானவர் என்பதாம். தேவர்களில் பருதி சிறந்திருத்தல் போல அரக்கரில் இவர் சிறந்தவர். நிருதி பெண் மகள் என்றலும் ஒரு கருத்து. "இந்திரன் கலையா யென் மருங்கிருந்தான், அக்கினி உதிரம் விட்டகலான். எமனெனைக் கருதா னரனெனக் கருதி, நிருதி வந்தென்னையென் செய்வாள்; அந்தமாம் வருணனிருகண் விட்டகலான்” (தனிப்பா) என்ற விடத்துக் காண்க.
ஆங்கிலம் · English translationAI
Translation
- "Sons of Nirutiyaṉ's line, equal to your own race,
- of a quality fit to be called 'the sun among the gods'; if they did not get
- blood to drink, they would drink the seven seas;
- dark as night, any one of them could lift all seven mountains."
What the poem says
These are the sons of Niruti, guardian of the south-west, said to be born of his wife Tīrkkā. They equal Irāvaṇaṉ's own line in valour and austerity and stand out among demons as the sun does among gods. They drink blood; without it they would drink the seven seas, and any one of them could lift all seven mountains.