கம்பராமாயணம் 9320 · யுத்த 29.21

Section யுத்த காண்டம் / 29. படைக்காட்சிப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1'பார் அணைத்த வெம் பன்றியை அன்பினால் பார்த்த
காரணத்தின், அனாதியின் பயந்த பைங்கழலோர்;
பூரணத்தடந் திசைதொறும் இந்திரன் பொருவு இல்
வாரணத்தினை நிறுத்தியது, இவர்வரவு அஞ்சி.

பொருள் · Meaning in Tamil

பார் அணைத்த வெம் பன்றியை - பூமிதேவி, தன்னை அணைத்தெடுத்த வராக மூர்த்தியை; அன்பினால் பார்த்த காரணத்தின் - அன்பினால் பார்த்த காரணத்தினால்; ஆதியின் பயந்த பைங்கழலோர் - திருமாலாற் பெறப்பட்ட பசிய பொன்னால் செய்யப்பட்ட வீரக்கழலை உடையவர்கள்; பூரணத் தடந்திசை தொறும் - முழுமையான பெருந்திசைகள் தோறும்; புலராவாரணத்தினை நிறுத்தியே இந்திரன் வாகை சூடினர் - மதம் வற்றாத தம்முடைய யானைகளை (வென்றதற்கு அடையாளமாக) நிறுத்தி இந்திரனை வென்ற வெற்றி மாலையைச் சூடினர்.

இந்திரனை வென்றமைக்கு அறிகுறியாக திசையானைகளை விலக்கித் தமது யானைகளை அவ்விடத்தில் நிறுத்தினர் என்பது கருத்து. ஒன்றார் இகல் அற நூறித்தன் மதவாரணம் திசைதொறு நிறுவிய - சீயகங்கன்" என்றதும் காண்க.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. "Because the Earth looked with love upon the fierce Boar who embraced her,
  2. these, wearing gleaming anklets, were born of the Primal One;
  3. in every one of the full, wide quarters, setting their own unflagging
  4. elephants in place, they wore the garland of victory over Intiraṉ."

What the poem says

These warriors were born when the Earth goddess looked with love on Tirumāl's Boar incarnation, who rescued her and lifted her from the ocean. They defeated Intiraṉ and, as a sign of victory, drove off the elephants that guard the eight directions and put their own ever-rutting elephants in their places.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1'pār aṇaitta vem paṉṟiyai aṉpiṉāl pārtta
kāraṇattiṉ, ātiyiṉ payanta paiṅ kaḻalōr;
pūraṇat taṭan ticaitoṟum intiraṉ pularā
vāraṇattiṉai niṟuttiyē cūṭiṉar vākai.