கம்பராமாயணம் 9323 · யுத்த 29.24

Section யுத்த காண்டம் / 29. படைக்காட்சிப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1'பாவம் தோன்றிய காலமே தோன்றிய பழையோர்;
தீவம் தோன்றிய முழைத் துணை என தெறு கண்ணர்;
கோவம் தோன்றிடின், தாயையும் உயிர் உணும் கொடியோர்;
சாவம் தோன்றிட, வட திசை மேல் வந்து சார்வார்.

பொருள் · Meaning in Tamil

சாவம் தோன்றிட வட திசை மேல் வந்து சார்வார் - வில் கையில் தோன்றிட வடதிசைமேல் வந்து தோன்றுகின்ற இவர்கள்; பாவம் தோன்றிய காலமே தோன்றிய பழையோர் - பாவம் தோன்றிய காலத்திலே தோன்றிய பழையவர்; தீவம் தோன்றிய துணை முழை எனத் தறு கண்ணார் - விளக்கு மிளிர்கின்ற இரண்டு குகைகளென்று சொல்லுமாறு (தோன்றி) பயம் விளைக்கின்ற விழிகளுடன் கூடியவர்கள்; கோவம் தோன்றிடின் தாயையும் உயிர் உணும் கொடியோர் - கோபம் வந்தால் தாயையும் உயிர் உண்கின்ற கொடியவர்கள் ஆவர்.

கண்ணோட்ட மற்ற கோபமுடையவர் என்பதனைக் குறிக்க "தாயையும் உயிருணும் கொடியார்" எனக் கூறினார்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. "Ancient ones, born at the very time that sin was born;
  2. with fierce eyes like a pair of caves in which lamps are lit;
  3. cruel ones who, if anger arises, would devour the life even of their mothers;
  4. with bows showing in their hands, they come on from the north."

What the poem says

This army comes from the north, bows in hand. They are as old as sin itself, their eyes glow like lamps burning inside a pair of caves, and their anger is so merciless that they would kill even their own mothers.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1'pāvam tōṉṟiya kālamē tōṉṟiya paḻaiyōr;
tīvam tōṉṟiya muḻait tuṇai eṉat taṟukaṇṇār;
kōvam tōṉṟiṭiṉ, tāyaiyum uyir uṇum koṭiyōr;
cāvam tōṉṟiṭa, vaṭa ticaimēl vantu cārvār.