கம்பராமாயணம் 9324 · யுத்த 29.25

Section யுத்த காண்டம் / 29. படைக்காட்சிப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1'சீற்றம் ஆகிய ஐம்முகன், உலகு எலாம் தீப்பான்
ஏற்ற மா நுதல் விழியிடைத் தோன்றினர், இவரால்;
கூற்றம் ஆகிப் பண்டு உதித்து உளர் எனக் கொடுந் தொழிலால்
தோற்றினார் இவர் வலி எலாம் தொலைவுறத் தொலைப்பார்.

பொருள் · Meaning in Tamil

இவர் சீற்றம் ஆகிய ஐம்முகன் - இவர்கள், சீற்றம் மிக்கவனாகிய ஐந்து முகங்களை உடைய சிவன்; உலகு எலாம் தீப்பான் ஏற்றமாநுதல் விழியிடைத் தோன்றினர் - உலகம் முழுவதையும் எரிக்கும்படி கொண்டுள்ள பெரிய நெற்றிக் கண்ணில் பிறந்தவர்கள்; உவர், ஐம்பாலுடைக் கூற்றம் ஆகிய கொம்பின் - அதோ அங்கிருப்பவர் கூந்தலைக் கொண்ட யமன் என்று கூறத்தக்க ஓர் பெண்ணின், கொடுமைக்கு ஊற்றம் ஆக, பண்டு உதித்தனர் என்பவர் - கொடுமைக்கு ஊன்றுகோலாக முற்காலத்தில் தோன்றியவர் எனப்படுவார்.

ஆல் - ஈரிடத்தும் அசை. சிவபிரான் சங்காரத் தொழில் முதலிரண்டடிகளில் குறிக்கப் பெறுகின்றது. அங்ஙனம் அழிவு செய்யுங் காலத்து அவ்விழியினின்றும் தோன்றியவர் என்பதாம். ஈசனின் ஐந்து முகங்களாவன, 1. ஈசானம், 2. தற்புருடம், 3. அகோரம், 4. வாமதேவம், 5. சத்யோசாதம் என்பனவாம். ஐம்பால் - கூந்தல். இவர்களை ஆதியில் பெற்ற தாய் கூற்றுப் போன்ற கொடுமையுடையளாய் இருந்தாள் என்பதனை இங்ஙனம் குறித்தார். கொம்பு - உவமையாகு பெயராய்ப் பெண்ணைக் குறித்தது.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. "These were born from the great eye on the brow of the five-faced one
  2. who is wrath itself, the eye he bears to burn all the worlds;
  3. those over there, it is said, were born long ago to a branch-like woman with braided hair
  4. who was Death itself, to be a mainstay for cruelty."

What the poem says

Two more hosts. One was born from the fiery third eye of Civaṉ, the five-faced god, at the time he burns up the worlds at the end of an age. The commentary lists his five faces: Īśāna, Tatpuruṣa, Aghora, Vāmadeva and Sadyojāta. The other was born of a woman as slender as a branch but as cruel as Death, to be the very prop of cruelty.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1'cīṟṟam ākiya aimmukaṉ, ulaku elām tīppāṉ
ēṟṟa mānutal viḻiyiṭait tōṉṟiṉar, ivarāl;
kūṟṟam ākiya kompiṉ aimpāluṭai, koṭumaikku
ūṟṟam āki, paṇṭu utittaṉar eṉpavar, uvarāl.