கம்பராமாயணம் 9325 · யுத்த 29.26
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
சூலம் ஏந்தி முன் நின்றவர் - சூலம் ஏந்திக்கொண்டு நம்முன் நின்ற இவர்; காலன் மார்பிடைச் சிவன் கழல் பட - எமனுடைய மார்பில் சிவனது திருவடி படுதலால்; பண்டு கான்ற வேலை ஏழ் அன்ன குருதியில் தோன்றிய வீரர் - முன்பு அவனது உடம்பிலிருந்து வெளிப்பட்ட இரத்தத்தில் தோன்றிய வீரர் ஆவார்; இந்நின்ற தொகையார் ஆலகாலத்தின் அமிழ்தின் முன் பிறந்தபோர் அரக்கர் - இங்கு நின்ற குழுவினர் ஆலகாலத்தில் அமிழ்திற்கு முன்னாகப் பிறந்த போர்த்திறன் மிக்க அரக்கராவார்.
காலன் - உரிய காலத்தில் உயிர்களைக் கவர்ந்து செல்லும் யமன். "காலனும் காலம் பார்க்கும்" (புறநா - 41) என்பது காண்க. மார்கண்டேயனுக்காக சிவபெருமான் காலாலுதையுண்ட யமன் கக்கிய இரத்தத்தினின்றும் தோன்றியவர். 'சூலம் ஏந்தி முன்னின்றவர்' என்றும், தொகையாக நின்றோர் பாற்கடல் கடைந்த காலத்து முன்பு தோன்றி வந்த ஆலகால விடத்தில் அமிழ்துக்கு முன்பு தோன்றியவர் என்றும் கூறப்பட்டது.
ஆங்கிலம் · English translationAI
Translation
- "When Civaṉ's foot struck the chest of Kālaṉ long ago, from the blood he vomited,
- like the seven seas, were born the warriors
- standing in front with tridents raised; this throng standing here
- are war-demons born in the Ālakālam poison, before the nectar."
What the poem says
The warriors at the front with tridents were born from the sea of blood that Yama (Kālaṉ, Death) vomited when Civaṉ kicked him in the chest to save the boy-devotee Mārkaṇṭēyaṉ. The throng behind them were born at the churning of the milk ocean, out of the Ālakālam poison, which surfaced before the nectar.