கம்பராமாயணம் 9326 · யுத்த 29.27

Section யுத்த காண்டம் / 29. படைக்காட்சிப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1'வடவைத் தீயிடை வாசுகி கான்ற மாக் கடுவை
இட, அத்தீ இடை எழுந்தவர் இவர்; இவர், மழையைத்
தடவித் தீநிமிர் குஞ்சியர் சங்கரன் தடந்தேர்
கடவத் தீந்த வெம் புரத்து இடைத் தோன்றிய கழலோர்.

பொருள் · Meaning in Tamil

இவர் வாசுகி கான்ற மாக்கடுவை - இவர்கள் (பாற்கடல் கடைந்தபொழுது) வாசுகி என்னும் அரவம் கக்கிய கொடிய நஞ்சினை; வடவைத் தீயினை இட, அத்தீயிடை எழுந்தவர் - வடவா முகாக்கினியில் இட அத்தீயிடத்துத் தோன்றியவர்; இவர் இன மழையைத் தடவ தீநிகர் குஞ்சியர் - இவர்கள் தொகுதியான மேகத்தைத் தடவா நிற்கும் தீப்போலும் சிவந்த குஞ்சியை உடையவராய்ப் பருத்துள்ளவர்கள்; உவர் தனித்தேர் கடவ, தீந்த வெம்புரத்திடைத் தோன்றிய கழலோர் - அதோ நிற்கின்ற அவர்கள் (பிரமனால் செலுத்தப் பெற்ற) ஒப்பற்ற தேரினை செலுத்தியதினால் வெந்த முப்புரங்களினிடையில் தோன்றிய கழலணிந்த வீரர்களாவர்.

வடவைத்தீ - பெண் குதிரையின் முகத்துடன் கடலின் கண் மறைந்து நின்று ஊழிக்காலத்து வெளிப்பட்டு உலகினை அழிக்கும் மாபெருந்தீ. அத்தீயில் கடல் கடைந்த காலத்து வாசுகி என்ற அரவம் கக்கிய ஆலகால விடம் படப் பிறந்தவர்களும், வானளாவிய நெடிய தோற்றத்தையும் சிவந்த தலைமுடியினையும் உடையவரும், பிரமனால் செலுத்தப் பெற்ற ஒப்பற்ற தேரிலிருந்து இறைவனால் அழிக்கப்பெற்ற முப்புரங்களின் அழிவினின்றும் தோன்றியவர்களுமாகிய அரக்கர்கள் இங்கு கூறப்பெற்றனர்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. "When the great poison that Vācuki vomited was thrown into
  2. the mare-fire, these rose from that fire; these, with fiery tufts
  3. that rise to stroke the massed clouds; and those, heroes with anklets, born
  4. in the burning cities scorched when the matchless chariot was driven."

What the poem says

More origins. Some demons were born when the poison spat out by the serpent Vācuki at the churning fell into the vaṭavai, the submarine "mare-faced" fire that will burn the world at the end of time; they tower so high that their flame-red hair brushes the clouds. Others came out of the three flying cities that Civaṉ burned up, riding the matchless chariot driven by Piramaṉ.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1'vaṭavait tīyiṉai vācuki kāṉṟa māk kaṭuvai
iṭa, at tīyiṭai eḻuntavar ivar; iṉa, maḻaiyait
taṭavit tīnimir kuñciyar ivar; uvar taṉit tēr
kaṭava, tīnta vem purattiṭait tōṉṟiya kaḻalōr.