கம்பராமாயணம் 9327 · யுத்த 29.28

Section யுத்த காண்டம் / 29. படைக்காட்சிப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

ஐய! இனையர் இன்னவர் என்பது ஓர் அளவு இலர் - ஐயனே! இவர் இத்தன்மையர் என்று தனித்தனியே சொல்லுதற்குரிய சிறிய அளவினர் அல்லர்; நினையவும், குறித்து உரைக்கவும் அரிது - இவர்கள் தன்மை நினைப்பதற்கும், குறித்துச் சொல்லுதற்கும் அரிது; இவர் நிறைந்த வினையமும் பெரு வரங்களும் தவங்களும் விளம்பின் - இவர் தம் நிறைந்த வஞ்சகங்களும், பெற்ற வரங்களும் அவ்வரங்களைப் பெற இவர் செய்த தவங்களும் சொல்லத் தொடங்கின்; அனைய பேருகம் ஆயிரத்து அளவினும் அடங்கா - அத்தன்மையான பெரிய ஊழிகள் ஆயிரத்தினும் அடங்காவாம்.

வினையம் - வஞ்சகம். அனைய என்பது நெஞ்சறி சுட்டாய் மிகப்பல ஆண்டுகளை விளக்க.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. "They are beyond any measure of 'such are they, so many are they,' my lord!
  2. It is hard even to think of them or to name them; if one told
  3. their abundant wiles, their great boons and their penances,
  4. a thousand of those vast ages would not be enough to hold it."

What the poem says

The messengers give up the catalogue. These hosts cannot be described one by one, and their tricks, their boons and the austerities that won them could not be told in a thousand cosmic ages.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1iṉaiyar iṉṉavar eṉpatu ōr aḷavu ilar aiya!
niṉaiyavum, kuṟittu uraikkavum; aritu; ivar niṟainta
viṉaiyamum peru varaṅkaḷum tavaṅkaḷum viḷampiṉ,
aṉaiya pēr ukam āyirattu aḷaviṉum aṭaṅkā.