கம்பராமாயணம் 9328 · யுத்த 29.29
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
வானவர்க்கு அரிய திருவ! - தேவர்கட்கும் பெறுதற்கரிய பெருஞ்செல்வத்தைப் பெற்றவனே! ஒருவரே சென்று அவ் உறு திறல் குரங்கையும் - இப்படையில் உள்ள ஒருவரே சென்று அந்த மிக்க திறமையுடைய குரங்கையும்; உரவோர் இருவர் என்றவர் தம்மையும் - வலியவர் இருவர் என்ற இராம இலக்குவர் தம்மையும்; ஒரு கையோடு எற்றி வருவர் - ஒரு கையினால் தாக்கி அழித்து வருவர்; மற்று இனிப் பகர்வது என்? என்றனர், தூதுவர். இராவணன் செப்பும் - வேறு இனிச் சொல்லுவதற்கு என்ன இருக்கிறது? என்று தூதுவர் சொல்லக் கேட்ட இராவணன் சொல்லுவான்.
குரங்கு - இங்கு அனுமனைக் குறித்தது. உரவோர் - வலியவர். செப்பும் - செய்யும் என்னும் முற்று ஆண்பாற்கண் வந்தது.
ஆங்கிலம் · English translationAI
Translation
- "Any one of them alone could go and dash that monkey of great might
- and the two who are called strong men with one hand
- and come back; what more is there to say? O you of fortune
- beyond the gods'," said the messengers. Irāvaṇaṉ spoke.
What the poem says
The messengers end with a boast: any single warrior of these armies could go out and smash the mighty monkey Aṉumaṉ and the two strong men, Irāmaṉ and Ilakkuvaṉ, with one hand. Irāvaṇaṉ then replies.