கம்பராமாயணம் 9329 · யுத்த 29.30

Section யுத்த காண்டம் / 29. படைக்காட்சிப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1'எத் துணைத்து இதற்கு எண் எனத் தொகை வகுத்து, இயன்ற
அத்திறத்தினை அறைதிர் 'என்று உரை செய; அவர்கள்
'ஒத்த வெள்ளம் ஓர் ஆயிரம் உளது 'என உரைத்தார்,
பித்தர்; இப் படைக்கு எண் சிறிது ' என்றனர், பெயர்ந்தார்.

பொருள் · Meaning in Tamil

இதற்கு எண் எத்திறத்து எனத்தொகை வகுத்து இயன்ற - இப்படைக்கு எண்ணிக்கை எனைத்து என்று தொகையை வகுத்துப் பொருந்திய; அத்திறத்தினை அறைதிர்' என்று உரை செய - அந்த வகையினைக் கூறுங்கள்' என்று இராவணன் கேட்க; அவர்கள், ஒத்த வெள்ளம் ஓர் ஆயிரம் உளது' என உரைத்தார் பித்தர் - அத்தூதுவர்கள் ஒத்த அளவினை உடைய வெள்ளம் ஓராயிரம் உளது' எனக் கூறினார்கள், அவர் பித்தராவார்; இப்படைக்கு 'எண் சிறிது' என்றனர், பெயர்ந்தார் - இப்படையின் அளவிற்கு 'அந்த எண் சிறிது' என்று கூறினராய்ச் சென்றார்கள்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. "Count its number in whatever way it may be reckoned, and tell me
  2. that measure as it stands," he said; and they said, "There are a thousand
  3. equal vellams of them." They were fools; "For this army that number is small,"
  4. they said, and went off.

What the poem says

Irāvaṇaṉ asks for a figure. The messengers answer: a thousand veḷḷams, a veḷḷam being an enormous number used for armies. The poet calls them fools to try counting at all; even they admit the number falls short, and leave.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1'et tiṟattu itaṟku eṇ eṉat tokai vakuttu, iyaṉṟa
at tiṟattiṉai aṟaitir 'eṉṟu uraiceya; avarkaḷ
'otta veḷḷam ōr āyiram uḷatu 'eṉa uraittār,
pittar; ip paṭaikku eṇ ciṟitu' eṉṟaṉar, peyarntār.