கம்பராமாயணம் 9330 · யுத்த 29.31

Section யுத்த காண்டம் / 29. படைக்காட்சிப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1'படைப் பெருங் குலத் தலைவரைக் கொணருதிர், என்பால்
கிடைத்து, நான் அவர்க்கு உற்றுள பொருள் எலாம் கிளத்தி
அடைத்த நல் உரை விளம்பினன் அளவளாய், அமைவு உற்று,
உடைத்த பூசனை வரன் முறை இயற்ற 'என்று உரைத்தான்.

பொருள் · Meaning in Tamil

நான் கிடைத்து அவர்க்கு உற்றுள பொருள் எலாம் கிளத்தி - (இராவணன் தூதுவரை நோக்கி) நான் அவர்களை நெருங்கி இருந்து இங்கு நிகழ்ந்துள்ள செய்திகள் எல்லாவற்றையும் விளக்கி; அடைத்த நல் உரை விளம்பினென் அளவளாய், அமைவுற்று - (என் மனத்தே) பொருந்திய நல்ல இனிய சொற்களைச் சொல்லி அளவளாவி மனம் நிறைவுற்று; உடைத்த பூசனை வரன் முறை இயற்ற படைப்பெருங்குலத் தலைவரை - அவர்களுக்கு உரித்தான பூசனையை வரன் முறையாகச் செய்யப் படையிலுள்ள பெருஞ் சிறப்புடைய தலைவர்களை; கொணருதிர், என்பால் என்று உரைத்தான் - என்னிடம் கொணர்வீர்களாக என்று சொன்னான்.

குலம் - சிறப்பு, கிடைத்தல் - நெருங்குதல் "விடைத்தனி யேறன்னானோர் விடலையோர் வேற்கணாள் முன் கிடைத்து" (திருவிளை - தருமிக்கு - 42) உற்றுள பொருள் என்றது, இதுவரை போரில் நிகழ்ந்தனவற்றை. அளவளாவுதல் - ஒருவர்க்கொருவர் மனம் விட்டுப் பேசுதல். பூசனை என்றது வீரர்க்கு அளிக்கும் பெருஞ்சோறு முதலானவற்றை.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. "Bring the chiefs of the great host to me;
  2. I will be close to them and tell them all that has befallen,
  3. speak fitting good words, converse with them, and, at ease,
  4. pay them the honours due in proper order," he said.

What the poem says

Irāvaṇaṉ orders the commanders of the new armies brought before him. He means to sit with them, tell them what has happened in the war so far, talk with them as friends, and honour them properly, which for warriors included a great feast.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1'paṭaip peruṅ kulat talaivaraik koṇarutir, eṉpāl
kiṭaittu, nāṉ avarkku uṟṟuḷa poruḷ elām kiḷatti
aṭaitta nal urai viḷampiṉeṉ aḷavaḷāy, amaivuṟṟu,
uṭaitta pūcaṉai varaṉmuṟai iyaṟṟa 'eṉṟu uraittāṉ.