கம்பராமாயணம் 9332 · யுத்த 29.33

Section யுத்த காண்டம் / 29. படைக்காட்சிப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

அனையர் யாவரும் அருகு சென்று அடிமுறை வணங்கி - (அவ்வாறு) அப்படைத்தலைவர் யாவரும் இராவணன் அருகிற் சென்று அவனடிகளை முறையாக வணங்கி; வினையம் மேவினர் இனிதின் அங்கு இருந்தது ஓர் வேலை - பணிவு பொருந்தினவராய் இனிதாக அங்கு இருந்தபோது; மறவோன், நும் வரவு நினையும் நல்வரவு ஆக! என நிரம்பி - பெருவீரனாகிய இராவணன் (அவர்களை நோக்கி) நும் வரவு யான் நினைக்கின்றபடி நல்வரவு ஆவதாக! என்று வரவேற்புச் செய்து முடித்து; 'மனையும் மக்களும் வலியரே?' என்றனன் - 'நும் மனைவியும் மக்களும் மெலிவின்றி வலியராக இருக்கின்றனரோ' என நலம் உசாவினான்.

வினையம் - பணிவு. நினையும் நல்வரவாவது - இராம இலக்குவரை வென்றழித்தலாம். வலியரே? என்றது நலமாக உள்ளனரோ? என வினவியவாறாம்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. When all of them had gone near, bowed at his feet in due order,
  2. and sat there pleasantly in humble attendance,
  3. "May your coming prove the good coming I have in mind!" so he fully welcomed them,
  4. and the warrior asked, "Are your wives and children strong?"

What the poem says

Irāvaṇaṉ receives the commanders with royal courtesy. He hopes their arrival will turn out to be the "good coming" he has in mind, meaning the defeat of Irāmaṉ and Ilakkuvaṉ, and asks after their wives and children, the customary way of enquiring after someone's welfare.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1aṉaiyar yāvarum aruku ceṉṟu, aṭi muṟai vaṇaṅki,
viṉaiyam mēviṉar, iṉitiṉ aṅku iruntatu ōr vēlai,
'niṉaiyum nal varavu āka, num varavu! 'eṉa nirampi,
'maṉaiyum makkaḷum valiyarē?' eṉṟaṉaṉ, maṟavōṉ.