கம்பராமாயணம் 9333 · யுத்த 29.34
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
அவன் கருத்து அறிவார் - அவ்விராவணனது கருத்தை அறியும் நோக்கத்தினராய் (படைத்தலைவர் இராவணனை நோக்கி); பெரிய திண்புயன் நீ உளை தவ வரம் பெரிதால் - பெரிய வலிமையான தோள்களை உடைய தலைவன் நீ இருக்கின்றாய்; யாங்கள் தவத்தினால் பெற்றுள்ள வரமும் மிகப்பெரிது; உரிய வேண்டிய பொருள் எலாம் முடிப்பதற்கு ஒன்றோ - நமக்கு உரியனவாய் வேண்டியுள்ள காரியங்களை யெல்லாம் முடிப்பதற்கு அரிதோ? தேவரை இரியல் கண்டனம் பகை பிறிது இல்லை - தேவரைத் தோற்றோடச் செய்து விட்டோம்; வேறு பகையும் இல்லை; அரியது என் எமக்கு என்றனர் - எமக்குச் செய்தற்கரியது என் உளது என்றனர்.
உளை - முன்னிலை ஒருமை வினைமுற்று. ஒன்றோ? என்பது 'ஒரு பொருட்டோ?” என்னும் பொருளது.
ஆங்கிலம் · English translationAI
Translation
- "You are here, with great, strong arms; the boons of our penance are great;
- is it any trouble to accomplish all the things that are ours to want?
- We have seen the gods put to flight; there is no other enemy;
- what is hard for us?" said they, seeking to learn his mind.
What the poem says
The commanders, trying to find out why they were summoned, answer boastfully: with Irāvaṇaṉ as their leader and the boons they have won by austerity, nothing is beyond them. The gods have already been routed, and they know of no other foe.