கம்பராமாயணம் 9334 · யுத்த 29.35
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
1'மாதரார்களும் மைந்தரும் நின்மருங்கு இருந்தார்
பேது உறாதவர் இல்லை; நீ வருந்தினை, பெரிதும்;
யாது காரணம்? அருள் 'என அனையவர் இசைத்தார்;
சீதை காதலின் பிறந்துள பரிசு எலாம் தெரித்தான்.
பொருள் · Meaning in Tamil
நின் மருங்கு இருந்தார் மாதரார்களும் மைந்தரும் - நின்பக்கத்து இருந்தவர்களாகிய பெண்டிர் பிள்ளைகளில்; பேது உறாதவர் இல்லை நீ பெரிதும் வருந்தினை - கலக்கமுறாதவர்கள் இல்லை நீ பெரிதும் வருந்திக் கொண்டிருக்கின்றாய்; யாது காரணம்? அருள்' என அனையவர் இசைத்தார் - யாது காரணம்? அருள் செய்க' என அப்படைத் தலைவர் வினவினார்; சீதை காதலின் புகுந்துள பரிசு எலாம் தெரித்தான் - (இராவணன்) சீதை மேல் வைத்த காதலால் உண்டான தன்மைகள் எல்லாவற்றையும் அவர்கட்குத் தெரிவித்தான்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- "Of the women and the young men who were at your side
- there is none who is not distraught; you are grieving greatly;
- what is the reason? Tell us graciously," they said;
- he told them all that had come about through his love for Cītai.
What the poem says
The commanders notice that everyone around Irāvaṇaṉ is distressed and that he himself is deep in grief, and ask why. Irāvaṇaṉ tells them the whole story, beginning with his desire for Cītai.
ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1'mātarārkaḷum maintarum niṉ maruṅku iruntār
pētu uṟātavar illai; nī varuntiṉai, peritum;
yātu kāraṇam? aruḷ 'eṉa aṉaiyavar icaittār;
cītai kātaliṉ pukuntuḷa paricu elām terittāṉ.