கம்பராமாயணம் 9337 · யுத்த 29.38
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
என்ன, கை எறிந்து, இடி உரும் ஏறு என நக்கு - என்று கூறிக் கைதட்டி இடிக்கின்ற இடியேறு போலச் சிரித்த; மின்னும் வாள் எயிற்று அரக்கரை அம்கையால் விலக்கி - மின்னுகின்ற வெள்ளிய பல்லினையுடைய அரக்கர்களை (அவ்வாறு சிரிக்காமல் இருக்கும்படி) தன் அகங்கையால் அமைத்து, விலக்கி விட்டு; புட்கரத்தீவுக்கு மன்னன் வன்னி என்பவன் - புட்கரம் என்னும் தீவினுக்கு அரசனாகிய வன்னி என்பவன்; அன்ன மானுடர் ஆர்? வலி யாது? என்று அறைந்தான் - அந்த மனிதர்கள் யார்? அவரது வலிமை எத்தகையது? என்று (இராவணனை நோக்கிக் கேட்டான்.
மனிதர்களையும், குரங்குகளையும், அற்பமாக மதித்துச் சிரித்த படைத்தலைவர்களின் ஏளன நகையை கையமர்த்தி அடக்கிய புட்கரத் தீவின் மன்னனாகிய வன்னி கும்பகன்னனையும் இந்திரசித்துவையும் வென்றழித்தவர் சாதாரணவராக இருக்கமுடியாது என்ற கருத்தினால் அம்மனிதர் யார்? அவர் வலிமை யாது? என வினவினான் என்க.
ஆங்கிலம் · English translationAI
Translation
- As they said this, clapping their hands and laughing like the thunderbolt's crash,
- with his fair hand he checked the demons with flashing sword-like fangs,
- and the one called Vaṉṉi, king of the island of Puṭkaram,
- asked, "Who are those men? What is their strength?"
What the poem says
One commander is wiser than the rest. Vaṉṉi, king of Puṣkara island, waves the laughing demons into silence. Anyone who could kill Kumpakaruṇaṉ and Intiracittu cannot be ordinary, so he asks Irāvaṇaṉ who these men are and how strong they are.